தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையை சார்ந்து இருந்தாலும், தமிழ்நாட்டு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை வலிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் சேவை துறையை தொடர்ந்து மேம்படுத்தும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது.
இதன் படி தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர்-ஐ தாண்டி மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஐடி சேவை துறையை மேம்படுத்தவும், அதன் மூலம் வர்த்தகம், வேலைவாய்ப்புகளை ஈர்க்கவும் மினி டைடல் பார்க் அமைக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல டைடல் பார்க் கட்டுமான பணிகள் பல மாநிலங்களில் துவங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக பகுதியாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில் புதிய டைடல் பார்க் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது திருச்சி மாநகராட்சி சுமார் 8.9 ஏக்கர் நிலத்தை பஞ்சப்பர் பகுதியில் டைடல் பார்க் கட்டுவதற்காக நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த டைடல் பார்க் பெரிய அளவிலான மாற்றத்தை திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தும், ஏற்கனவே திருச்சியில் பல சிறிய மற்றும் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்கள் இருக்கும் வேளையில், இந்த டைடல் பார்க் அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடைய முக்கிய பங்கு விகிக்கும் என்றால் மிகையில்லை.
டைடல் பார்க் வருகை மூலம் திருச்சி சார்ந்த தொழில்திபர்கள், டெக் வல்லுனர்கள் நாட்டில் பிற பகுதியில் வர்த்தகம் செய்து வந்தாலும், சொந்த ஊருக்கு அழைக்க இவர்களுக்கு பெரிய வாய்ப்பாக இந்த டைடல் பார்க் அமையும். கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு டெக் வல்லுனர்கள் தமிழ்நாட்டில் புதிய மற்றும் சொந்த நிறுவனத்தை துவங்குவது அதிகரித்துள்ளது.
உதாரணமாக மதுரை, திருநெல்வேலி-யில் பல டெக் தலைவர்கள் வெளிநாட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி சொந்தமாக நிறுவனம் துவங்க வேண்டும் என்ற திட்டத்துடன் வந்தவர்கள் அனைவருக்கும் சென்னை, பெங்களூரை தேர்வு செய்யாமல் சொந்த ஊரில் தங்களது வர்த்தகத்தை துவங்கியுள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக, முக்கிய பொறுப்பில் தமிழர்கள் இருந்தால், நிறுவனத்தின் அடுத்தக்கட்ட விரிவாக்கத்தை தமிழ்நாட்டில் குறிப்பாக 2ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை துவங்க பரிந்துரை செய்கிறார்கள். இதன் வாயிலாக பல நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications