திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலைகளுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் வகையில் ரூ.485 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (TIIC) மண்டல மேலாளர் ஜி. சகாதேவன் தெரிவித்தார்.
திருச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக் கடன் வழங்கும் விழாவில் 2 தொழில்முனைவோருக்கு சுமார் ரூ.60 லட்சத்திற்கான கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் ஜி. சகாதேவன்.

இந்த நிகழ்ச்சியில் ஜி.சகாதேவன் பேசுகையில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில் துறைக்கு தமிழகம் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் தமிழகப் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை நிர்ணயம் செய்துக் கொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்புத் தளவாட தொழில் வழித்தடம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, தொழில் முதலீட்டுக் கழகம், தொழில் வா்த்தகக் கழகம், இந்திய பாதுகாப்புத் தளவாட உற்பத்தியமைப்பு (எஸ்ஐடிஎம்) உள்ளிட்ட தொழில் கூட்டமைப்புகளோடு இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் ரூ.485 கோடி முதலீடு மற்றும் 1,960 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக தமிழ்நாட்டின் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறையில் புதியதொழில் முனைவோரை உருவாக்குவதுடன், ஏற்கெனவே இயங்கி வரும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்த பயனுள்ளதாக அமையும்.
இத்திட்டங்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோர் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் நிதியுதவி பெற்று தொழில் கூடங்களை விரிவாக்கவும், புதிய கூடங்களைத் தொடங்கியும் பயனடையலாம் என தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் ஜி.சகாதேவன் பேசினார்.
பின்னர் 5 தொழில் முனைவோர் தங்களது தொழில் கடன்களுக்காக வழங்கிய 21 கோடி ரூபாய்க்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட மண்டல மேலாளர் ஜி.சகாதேவன், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
நிகழ்வில் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ஏ.செந்தில்குமார், சிட்கோ கிளை மேலாளர் ராஜாராம், சிப்காட் உதவிப் பொறியாளர் ஜி. பாலமுரளி மற்றும் வங்கியாளர்கள், வா்த்தக நிறுவனத்தினர், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications