தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தைப் போலவே தற்போது திருச்சி மாவட்டமும் ஐடி துறையில் வேகமாக வளரும் பகுதியாக உருவெடுத்து, தமிழ்நாட்டின் IT துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்கீட்டு செய்யும் மாநகரமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் TIDCO மற்றும் ELCOT ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான டைடல் பார்க் நிறுவனம் சென்னை ஐடி துறை வளர்ச்சிக்கு வித்திட்டதோ, அதே பார்மூலா-வை பயன்படுத்தி தற்போது மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஐடி துறையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் Tidel Park Limited நிறுவனம் திருச்சியில் புதிய ஐடி பூங்காவின் கட்டுமானத்தைத் தொடங்க 315.2 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் நகரத்தின் தற்போதுள்ள ஐடி மற்றும் ஐடீஸ் உள்கட்டமைப்பை மூன்று மடங்கு அதிகரிக்கும் வகையில் 5.5 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை உருவாக்க உள்ளது என்பது தான் ஆச்சிர்யப்பட வைக்கும் ஒரு தகவல்.
கோயம்புத்தூர் போலவே கடந்த 2 வருடத்தில் திருச்சியில் ஐடி அலுவலக இடங்களுக்கான தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தேவையை தீர்க்க 1.8 லட்சம் சதுரடியில் ஐடி பார்க் கட்டி வித்திட்டது என்னவோ அரசு தான், தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் களத்தில் குறித்து இந்த டிமாண்ட்-ஐ பணமாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதன் வாயிலாக தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் வாயிலாக திருச்சியில் அடுத்த சில வருடத்தில் கூடுதலாக 6 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திருச்சியில் குறைந்த ரியல் எஸ்டேட் மற்றும் செயல்பாட்டு செலவு, திறமையான ஊழியர்கள் இருக்கும் காரணத்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் திருச்சி பக்கம் படையெடுக்க துவங்கியுள்ளது.
இந்த புதிய டைடல் பார்க், பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் அருகில் அமைய உள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் 5.5 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை வழங்கும் தரை தளம் மற்றும் ஆறு தளங்கள் கொண்ட கட்டமைப்பு இருக்கும். இரண்டாம் கட்டத்தில் கூடுதலாக 5.5 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானம் 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தொடங்கி 18 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, திருச்சியின் IT/ITES உள்கட்டமைப்புக்கு எல்காட் அணைப்பு உருவாக்கிய இரண்டு IT பார்க்கிற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 2 ஐடி பார்க்-ம் 1.8 லட்சம் சதுர அடியாகும். புதிய டைடல் பார்க் மூலம் நகரத்தின் ஐடி அலுவலக இடங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் 7.3 லட்சம் சதுர அடி வரை விரிவடையும்.
இது திருச்சி நகரத்தின் வளர்ந்து வரும் உற்பத்தித் துறை மற்றும் ஐடி துறைக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இத்திட்டம் வேகமாக முடியும் பட்சத்தில் இந்தியா முழுவதும் இருக்கும் திருச்சி டெக் ஊழியர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளூரிலேயே கிடைத்துவிட்டால் சொந்த ஊருக்கே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையும் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்யும்.
இதேவேளையில் திருச்சி நகரத்தின் முக்கிய பகுதிகளில் தற்போது புதிய அலுவலக திட்டங்கள் தொடங்கப்பட்டு வரும் நிலையில், கட்டூர் மற்றும் விமான நிலையம் போன்ற புறநகர் பகுதிகளும் அலுவலக இட மையங்களாக உருவாகி வருகின்றன. அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்ய, CII திருச்சி அமைப்பு இந்நகரத்தில் வணிக இடங்களை ஊக்குவிக்க ஐடி துறை முதலீட்டாளர்களையும், ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுடன் இணைக்கும் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications