டாடா குழுமம் எப்போதும் இல்லாமல் கடந்த 8 வருடத்தில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, புது பிஸ்னஸ், புதிய முதலீடு, போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றுதல், டிஜிட்டல் வர்த்தகம், ரீடைல் வர்த்தகம் விரிவாக்கம், நஷ்டத்தில் இருக்கும் வர்த்தகத்தை லாபகரமாக மாற்றியது முதல் ஏகப்பட்ட மாற்றங்கள்.
இந்த அத்தனை பெருமைக்கும் காரணம், தமிழரான என்.சந்திரசேகரன் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டது தான். சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் டாடா குழுமத்திற்கு மட்டும் அல்லாமல் டாடா குழும முதலீட்டாளர்களுக்கும் அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் உருவாகியிருக்கும் இன்டஸ்ட்ரி 4.0 புரட்சியில் டாடா குழுமம் செமிகண்டக்டர் முதல் ஆட்டோமொபைல் வரையில் பல துறையில் இறங்கியுள்ளது.
நேற்று தமிழ்நாடு அரசுடன் செய்த ஒப்பந்தத்தில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க அடுத்த 5 வருடத்தில் 9000 கோடி ரூபாய் முதலீடு செய்து, அதில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலையை ராணிப்பேட்டையில் அமைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் டாடா குழுமம் சில வருடங்களுக்கு முன்பு திருச்சி அருகே இருக்கும் மணப்பாறை சிப்காட்-டில் மிகப்பெரிய இடத்தை வாங்கியது மறக்க முடியாது. ராணிப்பேட்டை முதலீட்டு அறிவிப்பு வந்த உடன் டிவிட்டரில் திருச்சியில் எப்போது முதலீடு என கேட்க துவங்கியுள்ளனர்.
மணப்பாறை சிப்காட் பகுதியில் டாடா குழுமத்தின் டாடா ப்ராஜெக்ட்ஸ் இந்த 283 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளது. TATA Projects என்பது டாடா குழுமத்தின் கட்டுமான நிறுவனம் மட்டுமே என்பதால் இப்பகுதியில் எந்த நிறுவனம் வரப்போகிறது என்பதில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
டாடா குழுமம் மணப்பாறை சிப்காட் பகுதியில் ஒரு ஏக்கர் 77 லட்சம் ரூபாய் (முன்பு இதன் விலை 57 லட்சமாக இருந்தது) விலையில் 283 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியது.
மணப்பாறை சிப்காட்-டில் டாடா குழுமம் நிலத்தைக் கைப்பற்றிய உடன் இங்கு 4 துறை சார்ந்த தொழிற்சாலை வர உள்ளது என கணிக்கப்பட்டது, இதில் எலக்ட்ரிக் வாகனம் அல்லது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தொழிற்சாலை, செமிகண்டக்டர் தொழிற்சாலை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை, இல்லையெனில் ஐடி அல்லது டெக் சேவைகள்.
இதில் முதல் 3 பிரிவு தொழிற்சாலைகளை டாடா குழுமம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைத்துள்ளது. செமிகண்டக்டர் - அசாம், குஜராத், EV - குஜராத், லண்டன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் - ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலை அமைத்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி ஐடி துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் டிசிஎஸ் மற்றும் டாடா டெக்னாலஜிஸ் போன்ற டாடா குழுமத்தின் ஐடி சேவை பிரிவுகள் திருச்சியில் வர வாய்ப்பு உள்ளது. இதில் டாடா டெக்னாலஜிஸ் சமீபத்தில் கோயம்புத்தூரில் அலுவலகத்தைத் துவங்கியது.
இதனால் டிசிஎஸ் சென்னை சிறுசேரியில் அமைந்துள்ளது போல் மாபெரும் அலுவலகத்தைத் திருச்சியில் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு வந்துள்ளது. இதுமட்டும் நடந்துவிட்டால் தமிழ்நாட்டுக்கு அடுத்த பொக்கிஷம் கிடைத்துவிடும்.
ஆனால் தமிழ்நாட்டின் புதிய ஐடி ஹாப் ஆக கோயம்புத்தூர் உருவாகி வருவதால் திருச்சி ஐடி அலுவலக திட்டமும் தாமதமாகி வருகிறது. இதனால் மணப்பாறை சிப்காட்டில் டாடா குழுமத்தின் திட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications