தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆர்வத்தை உண்மையான முதலீடாக மாற்றும் பொருட்டு தொழிற்சாலைகளை அமைக்க பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஜூன் மாத இறுதியில் சுமார் 11000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு அமைப்பான SIPCOT மாநிலம் முழுவதும் 8 இடங்களில் 4,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்களை அமைக்க உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை அருகே கும்மிடிப்பூண்டி-யில் 1,500 ஏக்கரிலும், தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கரிலும்,ஸ்ரீபெரும்புதூர்-ல் 750 ஏக்கரிலும்,சென்னை ORR பகுதியில் 200 ஏக்கரிலும்,திருச்சி திருவெறும்பூரில் 150 ஏக்கரிலும்,அரியலூரில் 150 ஏக்கரிலும்,மன்னார்குடியில 150 ஏக்கரிலும்,பெரம்பலூரில் 100 ஏக்கரிலும் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி மக்கள் மத்தியில் இப்புதிய சிப்காட் திருவெறும்பூரில் எங்கு அமைய உள்ளது என்பதில் பெரும் குழப்பம் இருந்த நிலையில் இதற்கான விளக்கம் அமைச்சர் TRB ராஜா, அன்பில் மகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தது மூலம் உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, HEPF தொழிற்சாலைக்குச் சொந்தமான 150 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு அரசு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB ராஜா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் இணைந்து 150 ஏக்கர் நிலப்பரப்பை ஆய்வு செய்தனர்.
இந்த 150 ஏக்கர் இடம் எலந்தப்பட்டி அருகிலும் சூரியூர் டவுன் பகுதியிலும் அமைந்துள்ளது. திருச்சிக்கு இது 2வது சிப்காட் என்பதால் திருச்சி-யின் தொழிற்துறை வளர்ச்சிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது தெரிகிறது.
இந்த புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைப்பு, திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது. தமிழ்நாடு அரசு, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் சிப்காட் தொழில் பூங்காக்களை அமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications