ஆப்பிள் நிறுவனத்திற்கான சாதனங்களை சப்ளை செய்யக்கூடிய ஜபில் நிறுவனம் திருச்சியில் அமைய இருக்கும் ஆலையில் ஏர்பாட்களை (Airpod) உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தக போர் நிகழ்ந்து வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிகபட்ச வரியை விதித்திருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் குறிப்பாக மின்னணு சாதன நிறுவனங்கள் சீனாவில் தயாரித்து பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நம்பர் ஒன் ஸ்மார்ட் போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தங்களுடைய ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்சுகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்காக பெருமளவில் சீனாவை தான் சார்ந்து இருக்கிறது. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக ஆப்பிள் நிறுவனம் தங்களின் உற்பத்தியை சீனாவிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்றுவது என திட்டமிட்டு இருக்கிறது .
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு வினியோகம் செய்யப்படுகின்றன ஐபோன்கள் தவிர்த்து ஏர்பாட்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. ஜபில் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்களுக்கான பிளாஸ்டிக் பாடிகளை தற்போதைக்கு உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. புனே ஆலையில் ஏர்பாட்களுக்கான பாடிகளை தயாரித்து சீனா, வியட்நாம் ஆலைகளுக்கு அனுப்புகிறது.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று கூடிய விரைவில் ஜபில் நிறுவனம் இந்தியாவில் ஏர்பாட்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இதற்காக திருச்சியில் அமைய இருக்கும் தங்களுடைய ஆலையை பயன்படுத்திக்கொள்ள ஜபில் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம். இதன் மூலம் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்கள் உற்பத்தி தொடங்க இருப்பது தெரியவந்துள்ளது.
ஜூன் அல்லது ஜூலைக்குள் தமிழ்நாடு அரசிடம் தங்களுடைய ஏர்பாட் உற்பத்தி ஆலையை நிர்வகிப்பது தொடர்பான திட்டத்தை சமர்ப்பித்து ஒப்புதல் பெறும் என சொல்லப்படுகிறது. ஜபில் நிறுவனத்தின் அதிகாரிகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார்களாம். கடந்த மாதமே இந்த சந்திப்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து அவர்கள் திருச்சிக்கு சென்று அங்கே தங்கள் ஆலை அமைய இருக்கும் பகுதியை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனத்திற்கு பொருட்களை உற்பத்தி செய்து வினியோகம் செய்யக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களுடைய உற்பத்தி மையங்களாக மாற்றி வருகின்றன .ஏற்கனவே ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐதராபாத் ஆலையில் ஏர்பாட்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது ஜபில் நிறுவனமும் தன்னுடைய ஏர்பாட் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டு இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications