ட்ரூகாலரின் (Truecaller) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரிஷித் ஜுன்ஜுன்வாலாவை நியமித்துள்ளனர். இவர் 2025-ஆம் ஆண்டு, ஜனவரி 9-ஆம் தேதி சிஇஓ-வாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய CEO அலன் மம்மேடி மற்றும் சீப் ஸ்டார்ட்ஜி ஆபிஸரான நாமி ஜாரிங்கலாம் ஆகியோர் தங்கள் நிர்வாகப் பதவிகளில் இருந்து விலகி, தங்கள் இயக்குனர் பொறுப்புகளில் கவனம் செலுத்தவும், ட்ரூகாலருக்கு ஆலோசகராக செயல்படவும் முடிவு செய்துள்ளனர்.
"எங்களிடம் அற்புதமான மேனேஜ்மென்ட் டீம் இருக்கிறது. அதில் எங்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. மேலும் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் நீண்ட கால வளர்ச்சிக்கு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்," என்று இணை நிறுவனங்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி 2025-ஆம் ஆண்டின் ஜூன் 30-ம் தேதி வரையில் மம்மேடி மற்றும் ஜாரிங்கலாம் தொடர்ந்து ஆலோசகர்களாக பணியாற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கும் ஜுன்ஜுன்வாலா 2015-ஆம் ஆண்டு முதல் ட்ரூகாலரில் இருந்து வருகிறார். இதற்கு முன்னர் இவர் ப்ராடக்ட் ஹெட்-ஆக பணியிலிருந்தார். 2022-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சீப் ப்ராடக்ட் ஆஃபீஸ்ராக பணியாற்றினார். அதன் பிறகு மே மாதம் 2021-ஆம் ஆண்டு இந்தியாவின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்.
ப்ராடக்ட் தொடர்பான அவருடைய ஆழமான அறிவு மற்றும் அனுபவம் எங்களுடைய வெற்றிக்கு மிக முக்கியமானவை. அவரை நாங்கள் எப்போதும் ட்ரூகாலரின் இணை நிறுவனராக தான் கருதுகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் ஜுன்ஜுன்வாலா-க்கு தனிப்பட்ட முறையில் வழிகாட்டும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் நிறுவனத்தை உலகளவில் வழிநடத்த தயாராக இருப்பதாக நம்புகிறோம் என்று தன் கடிதத்தில் ட்ரூகாலரின் இணை நிறுவனர்கள் தெரிவித்திருந்தனர்.
ஜுன்ஜுன்வாலா இந்தியாவில் பிறந்து வளர்ந்தார், ஆனால் இவர் ஒரு ஸ்வீடிஷ் குடிமகன். 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஸ்வீடனில் வேலை செய்து கொண்டிருந்தார். "மற்ற மேனேஜ்மென்ட் மெம்பர்களுடன் சேர்ந்து ட்ரூகாலரை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளேன். 2015-ஆம் ஆண்டு முதல் ஆலன் மற்றும் நமியுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளேன். இன்னும் எந்தெந்த விஷயங்களை சரி செய்ய வேண்டி இருக்கிறது என்பது எனக்கு தெரியும். எதிர்கால தகவல் தொடர்புகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான பணியில் அயராது உழைக்க இருக்கிறேன்", என்று ஜுன்ஜுன்வாலா குறிப்பிட்டுள்ளார்.
ட்ரூகாலர் அப்ளிகேஷன் யார் தொடர்பு கொள்கிறார் என்ற அடையாளத்தை காண்பிக்கும் அப்ளிகேஷன் ஆகும். ட்ரூகாலருக்கு உலக அளவில் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருக்கிறது. 500 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களை ட்ரூகாலர் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications