அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்ட H-1B விசா தொடர்பான உத்தரவின் எதிரொலியாக ஒட்டுமொத்த டெக் துறையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியது. இந்த உத்தரவில் ஹெச்1பி விசா ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் ஒவ்வொரு விசாவுக்கும் 1 லட்சம் டாலர் (தோராயமாக ரூ.88 லட்சம்) கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ஐடி துறை மற்ற விசாக்களை காட்டிலும், ஹெச்1பி விசாக்களை தான் அதிகம் சார்ந்துள்ளது, இதேபோல் அமெரிக்காவில் 50 சதவீத வர்த்தகத்தை வைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு விசாவுக்கும் 1 லட்சம் டாலர் என்பது வர்த்தகத்திலும், வருமானத்திலும் பெரும் ஒட்டையை போட்டுவிடும்.

இதன் எதிரொலியாக திங்கள் வர்த்தகத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ், விப்ரோ, HCL டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா மற்றும் கோஃபோர்ஜ் போன்ற ஐடி நிறுவன பங்குகள் 6 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்து 35,482 புள்ளிகளை எட்டி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திங்கள் காலை வர்த்தகத்தில், டெக் மஹிந்திரா பங்குகள் 5 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டு நாளின் குறைந்தபட்சமாக ரூ.1,453-ஆக வந்தன. இதை தொடர்ந்து இன்போசிஸ் ரூ.1,482-க்கும், டிசிஎஸ் ரூ.3,065 என்ற குறைந்தபட்ச விலையை பதிவு செய்துள்ளது.
இதோடு ஹெச்சிஎல் டெக் ரூ.1,415, கோஃபோர்ஜ் ரூ.1,702, பெப்சிஸ் ரூ.2,817 என்ற நிலையில் 3 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி சந்தித்தன. இந்த வீழ்ச்சி, வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தையில் இன்போசிஸ் ADR 3.4 சதவீதம், காக்னிசன்ட் 4.75 சதவீதம் குறைந்ததன் தொடர்ச்சியாக இந்திய சந்தையிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஐடி துறையின் வீழ்ச்சி காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

இந்த 1 லட்சம் டாலர் விசா கட்டணம் அமேசான், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் எளிதாக சமாளித்தாலும், சிறிய நிறுவனங்களும், லாப அளவுகளை நிலைநிறுத்த போராடும் நிறுவனங்களை அதிகளவில் பாதிக்கும் என்பதன் விளைவே இன்றைய ஐடி பங்குகளின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
White House விளக்கம்
வெள்ளை மாளிகை அதிகாரி ஹெச்1பி விசா கரோலின் லீவிட் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த 1 லட்சம் டாலர் கட்டணம் ஒரே முறை செலவாகும், புதிய ஹெச்1பி விண்ணப்பத்துடன் மட்டுமே இது வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்பு இந்த ஒரு லட்சம் டாலர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டுக்கும் செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்த கட்டணம் தற்போதைய H-1B விசா ஊழியர்கள், ரினிவல், அமெரிக்காவுக்கு வெளியே இருந்தாலும் அல்லது திரும்பி நுழைந்தாலும் இந்தக் கட்டணம் பொருந்தாது என விளக்கப்பட்டது.
மேலும் இது 2025 லாட்டரியில் பங்கேற்றவர்களை பாதிக்காது, அடுத்த 2026 சுழற்சியில் முதலில் அமலாகும் என விளக்கம் கொடுத்தார். இது ஐடி துறை முதலீட்டாளர்களுக்கு சிறிய அளவல் நிம்மதி அளித்தாலும், புதிதாக டெக் ஊழியர்களை ஈர்க்கும் நிறுவனங்களுக்கு இது பெரும் சவாலாக இருாக்கும்.
இதனால் இந்த வருடம் விசா வாங்குபவர்களுக்கு ஜாக்பாட், ஆனால் அடுத்த ஆண்டு முதல் இந்திய ஐடி நிறுவனங்கள் ஹெச்1பி விசா பெற வேண்டுமாயின் ஒவ்வொரு விசாவுக்கு 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டும்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
அமெரிக்க குடியேற்ற சேவைகள் (USCIS) தரவுகளின்படி, கடந்த ஆண்டு TCS 5,505 H-1B விசாக்களைப் பெற்றுள்ளது, இன்போசிஸ் 2,004, விப்ரோ 1,523 விசாக்களை பெற்று அமெரிக்காவில் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்தியாவின் 283 பில்லியன் டாலர் ஐடி துறை, அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு 13,396 H-1B விசாக்களை ஸ்பான்சர் செய்து ஊழியர்களை அந்நாட்டில் பணியில் அமர்த்தியுள்ளது. தற்போதைய கட்டண உயர்வால் இதே எண்ணிக்கையில் ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டுமாயின் தற்போதைய 13.4 மில்லியன் டாலர் செலவுகள் 1.34 பில்லியன் டாலர்களாக உயரும்.
இது TCS, இன்போசிஸ், HCL ஆகியவற்றின் FY25 நிகர லாபத்தின் 10 சதவீதத்திற்கு சமமான தொகை.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?



Click it and Unblock the Notifications