அமெரிக்க பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுருங்கியுள்ளது, ஆம் பொருளாதாரம் பொதுவாக வளர்ச்சி பாதையில் இருக்கும், ஆனால் சில நேரத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவான அளவை பதிவு செய்தால் சுருங்கியுள்ளதாகக் கருதப்படும். அந்த வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த 3 வருடத்தில் இல்லாத வகையில் சுருங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குழப்பமான வரி கொள்கையால் ஏற்பட்ட பாதிப்புகள், நிறுவனங்கள் வரியால் ஏற்படும் அதிக செலவுகளைத் தவிர்க்க முன்கூட்டியே அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்ததால் இந்த பொருளாதார சரிவு ஏற்பட்டது.

அமெரிக்க வர்த்தகத் துறையின் பொருளாதார பகுப்பாய்வு அமைப்பு, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணிப்பில், அமெரிக்க பொருளாதாரம் வருடாந்திர அடிப்படையில் -0.3 சதவீதம் குறைந்துள்ளது. இது, முந்தைய காலாண்டில் 2.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்பின் முதல் 100 நாட்கள் ஆட்சியில் இந்த மோசமான சரிவு முதலீட்டாளர்களையும், வர்த்தக துறையையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பணவீக்கத்தை டிரம்ப் அரசு உடனடியாக கட்டுப்படுத்தினாலும், பொருளாதார அளவீட்டில் இது எதிரொலித்துள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க மக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பைடன் ஆட்சியில் நிலவிய பொருளாதார அச்சங்கள், குறிப்பாகப் பணவீக்கத்தால் மக்கள் அவதிப்பட்டதால், டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், தற்போது நுகர்வோரின் மனநிலை கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் உள்ளது, மேலும் வணிக துறையின் வளர்ச்சியின் அளவும் பெரிதும் சரிந்துள்ளது. டிரம்பின் வரி கொள்கை அமெரிக்கப் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.
டிரம்ப்-ன் வரி விதிப்புகள் எந்த அளவுக்கு அமெரிக்காவைப் பாதிக்கிறது என்பதை விமான நிறுவனங்கள் காட்டியுள்ளது, டிரம்ப்-ன் வரி விதிப்பால் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மக்கள் செலவு செய்வதைக் குறைத்துள்ளனர். இதனால் விமான போக்குவரத்துத் துறையில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது, இதனால் அமெரிக்க விமான நிறுவனங்கள், 2025 ஆம் ஆண்டிற்கான தங்களது நிதியில் கணிப்புகளை வெளியிடுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் பொருளாதாரம் சரிந்ததைத் தாண்டி, முதல் காலாண்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளது, மேலும் இந்த ஆண்டு முழுவதும் பணவீக்கம் உயரும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பணவீக்க அழுத்தம், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கும் வகையில் செலவினங்களை அதிகரித்து, அவர்களின் நிதி நிலைமையை மோசமாக்கும்.
இருப்பினும், பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டில் 1 சதவீதம் வரையில் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். வட்டி விகிதங்கள் குறைப்பு அமெரிக்காவில் கடன் விகிதத்தைக் குறைத்து பணப்புழக்கத்தை அதிகரிக்கும் இதன் மூலம் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு வரும் எனக் கணிக்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications