அமெரிக்க டிரம்ப் அரசு நிர்வாகம் வெள்ளிக்கிழமை H-1B விசா பெறும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் வரையிலான கட்டணத்தை அந்நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த டெக் உலகை அதிர வைத்துள்ளது.
அமெரிக்க டெக் துறை இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் திறமையான தொழிலாளர்களை அதிக அளவில் சார்ந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் யாரெல்லாம் பாதிக்கப்படப்போகிறார்கள்..? யாரெல்லாம் தப்பிக்கப்போகிறார்கள்..? என்பதை முழுமையாக பார்ப்போம்.

ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து டிரம்ப் விசா, கிரீன் கார்டு, குடியுரிமை என வெளிநாட்டவர்களுக்கு எதிராக பல கடுமையான விதிமுறைகளை டிரம்ப் அரசு விதித்து வருகிறது. ஏற்கனவே பல மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இந்த புதிய 1 லட்சம் டாலர் கட்டணம் வெளிநாட்டு டெக் ஊழியர்கள் குறிப்பாக இந்திய டெக் ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
H-1B விசா முறையில் ஏற்படும் மாற்றங்கள்
H-1B விசா மூலம் வெளிநாட்டவர் அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை பார்க்கும் உரிமையை வழங்கும் ஒரு அனுமதி சீட்டு, இந்த விசா மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை செல்லுபடியாக்கூடிய கால அட்டவனையில் அமெரிக்க அரசு திறமையான வெளிநாட்டவருக்கு அளித்து வருகிறது.
யாருக்கு அதிக பாதிப்பு:
இந்த நிலையில் டிரம்ப் அரசு விதிக்கப்பட்டு உள்ள 100000 டாலர் கட்டணம் மூலம், ஹெச்1பி விசாவுக்காக புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு, விசா ரினிவல் செய்யும் செய்யும் நபர்களையும் பெரிய அளவில் பாதிக்கும்.
டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு படி விசா பெற்ற ஊழியர்களை பணியில் சேர்த்தால் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனால் எந்தொரு நிறுவனமும் இத்தகைய கட்டணத்தை செலுத்த தயாராக இருக்காது. இதனால் ஹெச்1பி விசா ஊழியர்களை நியமிப்பதை குறைக்கும் அல்லது நிறுத்தும்.
யாருக்கு அதிக லாபம்:
சமீபத்தில் விசா பெற்றவர்கள் தற்காலிகமாக இந்த புதிய கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க உள்ளனர். இது அவர்களின் விசா காலம் முடியும் வரையில் அது பலன் அளிக்கும். இதேபோல் ஏற்கனவே விசா வைத்துள்ளவர்களுக்கு இது பொன்னான காலமாக பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு தற்போது அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
நிறுவனங்களின் பக்கம்
இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் சிறிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் நிறுவனங்கள் ஒவ்வொரு விசாவுக்கும் 1 லட்சம் டாலர் என்ற கடுமையான தொகையை செலுத்த தயாராக இருக்காது, ஆனால் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் இத்தொகையை பிடித்தம் செய்து பணியில் அமர்த்தலாம். இதேபோல் இந்த அதிகப்படியான சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். இதனால் அனைவருக்கும் இத்தகைய வாய்ப்பு கிடைப்பது அரிது.
எதிர்ப்பு:
இந்த புதிய விசா கட்டண முறைக்கு சட்ட ரீதியாக எதிர்க்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் திரும்ப பெறப்படாலம். ஒவ்வொரு விசா தொழிலாளருக்கும் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர், அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை செலுத்த வேண்டியிருக்கும். இத்தகைய பெரும் தொகையை எந்தொரு நிறுவனத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே தற்போதைய பிரச்சனை.
More From GoodReturns

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!



Click it and Unblock the Notifications