டிரம்ப் போட்ட 1 லட்சம் டாலர் கட்டணம்.. சின்னாபின்னமாகும் TCS, இன்போசிஸ்..? ஏன் தெரியுமா..?! #H1B

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்ட அரசு ஆணை தான் தற்போது உலகம் முழுவதும் பேசும் முக்கியமான விஷயமாக உள்ளது. இந்த உத்தரவில் H-1B விசா விண்ணப்பங்களுக்கு இன்று நிறுவனம் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எந்த அளவுக்கு பாதிக்கும்..?

இது தற்போதைய ஹெச்1பி விசா கட்டணங்களான 1,700 முதல் 4,500 டாலர்கள் வரையிலான தொகைக்கு மேல் விதிக்கப்பட உள்ளது. அதாவது அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனம் இந்திய டெக் ஊழியரை பணியில் நியமிக்க வேண்டுமாயின் 1,04,500 டாலர் தொகையை முதல் ஆண்டு செலுத்த வேண்டும். அதன் பின்பு ஒவ்வொரு ஆண்டும் 1,00,000 டாலர் செலுத்த வேண்டும்.

இந்த உத்தரவால் அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களும், இந்திய ஐடி சேவை நிறுவனங்களும் எந்த அளவுக்கு பாதிக்கப்படும்..?

டிரம்ப் போட்ட 1 லட்சம் டாலர் கட்டணம்.. சின்னாபின்னமாகும் TCS, இன்போசிஸ்..? ஏன் தெரியுமா..?! #H1B

அமெரிக்க குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு ஹெச்1பி விசாவை பலக்கட்ட சோதனைக்கு பின்பு லாட்டரி முறையில் விநியோகிக்கப்படுகின்றன, ஆனால் இப்போது இந்த புதிய கட்டணம் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் நிதி செலவுகளை உருவாக்கும் காரணத்தால் ஒரு முறைக்கு இரண்டுமுறை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அமேசான், IBM, மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசாவை அதிகம் சார்ந்துள்ளதால் இந்த உத்தரவு அமெரிக்க டெக் சந்தையை பெரிய அளவில் பாதிக்க உள்ளது.

2025 ஜூன் வரையிலான USCIS தரவுகளின்படி, அமேசான் 10,044 H-1B விசாக்களைப் பெற்றுள்ளது. இதே எண்ணிக்கையில் அடுத்த ஆண்டும் பணியாளர்களை நியமிக்க வேண்டுமாயின் அமேசான் வருடத்திற்கு இனி விசா பெறுவதற்காக மட்டுமே 1 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும். இந்த உத்தரவு செப்டம்பர் 21, 2025 அன்று அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு H-1B விசாக்களை அதிகம் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் அமேசான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 5,505 விசாக்களை பெற்றுள்ளது. இந்த 5,505 விசாக்களை தொடர்ந்து பெற வேண்டுமெனில், டிசிஎஸ் நிர்வாகம் வருடம் 1 லட்சம் டாலர் எனில், வருடத்திற்கு கிட்டத்தட்ட 4,850 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வரும்.

டிசிஎஸ் நிறுவனம் 2024-25ஆம் நிதியாண்டில் முதல் முறையாக 30 பில்லியன் டாலர் வருமானம் அதாவது 2,55,324 ரூபாய் வருவாய் ஈட்டியது. இதேபோல் இக்காலக்கட்டத்தில் ஆப்ரேட்டிங் லாப அளவீடு 62,165 கோடி ரூபாய், இது 2024ஆம் நிதியாண்டில் 59,311 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியிருக்கையில் தொடர்ந்து 5,505 விசாக்களை பெற்று அமெரிக்காவில் வர்த்தகத்தை நடத்த வேண்டுமாயின் ஆப்ரேட்டிங் லாபத்தில் 4,850 கோடி ரூபாயை இழக்க வேண்டிய நிலை வரலாம். இதனால் டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தனது வர்த்தக மாடலை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அமேசான், டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் 5,189, மெட்டா 5,123, ஆப்பிள் 4,202, கூகுள் 4,181, டெலோயிட் 2,353, இன்போசிஸ் 2,004, விப்ரோ 1,523, டெக் மஹிந்திரா அமெரிக்காஸ் 951 ஆகிய நிறுவனங்கள் உள்ளது. இந்தத் தரவுகள் அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஹெச்1பி விசா முறையை எவ்வளவு அதிகம் நம்பியுள்ளது என்பதை காட்டுகிறது.

டிரம்ப் உத்தரவில், H-1B முறையை 'சிஸ்டமாடிக் அப்யூஸ்' என்று விமர்சித்து, சில நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி அமெரிக்க ஊழியர்களை பணியில் இருந்தும் வேலைவாய்ப்பு சந்தையில் இருந்தும் வெளியேற்றி வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கிறதாகக் கூறுகிறது.

ஏற்கனவே டிரம்ப் அரசு HIRE மசோதாவை தாக்கல் செய்து இருக்கும் வேளையிலும், ஹெச்1பி விசாவை சம்பளம் மற்றும் கல்வி திறன் அடிப்படையில் அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆய்வு செய்து வருவதற்கு மத்தியில் 1 லட்சம் டாலர் கட்டண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, ஒட்டுமொத்த டெக் துறையும் பாதித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+