பெங்களூரு: அமெரிக்க அரசு இந்திய பொருட்கள் மீது 50% வரி விதித்திருப்பது இந்தியாவின் பல்வேறு துறைகளையும் கடுமையாக பாதிக்க இருக்கிறது .
எந்தெந்த மாநிலங்கள் பாதிப்பு: குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ,உத்திரபிரதேசம், ஆந்திர பிரதேசம் ,ஹரியானா , பஞ்சாப் , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் ஏற்றுமதி துறை சார்ந்து இயங்கக்கூடிய தொழில்கள் இதன் மூலம் பெரிய அளவில் இழப்பை சந்திக்க இருக்கின்றன. ஜவுளி ஏற்றுமதி, நகை மற்றும் நவரத்தினங்கள் ,தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி , கடல் சார்ந்த உணவுகள் ஏற்றுமதி ,மரச்சாமான்கள் ,பொறியியல் சார்ந்த பொருட்கள், ஐடி துறை என பல்வேறு துறைகளும் இந்த வரி விதிப்பினால் பாதிக்கப்பட உள்ளன.

கர்நாடகாவில் என்ன பாதிப்பு: கர்நாடக மாநிலத்தை பொருத்தவரை அந்த மாநிலத்தின் பொறியியல் மற்றும் ஜவுளித்துறை அமெரிக்க அரசின் 50 சதவீத வரி விதிப்பால் பெரிய பாதிப்பை சந்திக்க இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலம் சுமார் 0.5 பில்லியன் டாலர்கள் வரையிலான இழப்பை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 10,000க்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார அச்சுறுத்தல்: டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்வதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கர்நாடக மாநிலத்தை பொருத்தவரை முதலமைச்சர் சித்தராமையான், பிரதமர் மோடி தலைமையிலான அரசு டிரம்பின் வரி விதிப்பை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்.
அரசுக்கு கோரிக்கை: மேலும் டிரம்பின் வரி விதிப்பு செயல் பொருளாதார அச்சுறுத்தல் என்றும் அவர் சாடி இருக்கிறார். கர்நாடக மாநில ஐடி துறை அமைச்சரான பிரியங்க் கார்கே மத்திய அரசு இந்த வரி விதிப்பு நடவடிக்கையில் இருந்து மாநிலங்களின் உற்பத்தி துறைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தை பொருத்தவரை ஜவுளி துறையை பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்க இருக்கிறது இந்த சூழலில் தான் ஜவுளி துறையை சேர்ந்த உரிமையாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கின்றனர் . இதனால் பல லட்சம் ரூபாய் வரை அவர்களுக்கு இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகிறது . அவ்வாறு ஏற்பட்டால் ஏற்றுமதி தேக்கமடைந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் சூழல் உண்டாகும். சில ஆலைகள் மூடப்படும் நிலைக்கு கூட செல்லலாம்.
நாளை முக்கிய ஆலோசனை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து தங்களுடைய தொழில் பாதிக்காத வகையில் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் . இன்று விநாயகர் சதுர்த்தியால் ஆலைகளுக்கு விடுமுறை விட்டிருப்பதாக கூறும் கர்நாடக மாநில ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்கள் நாளைய தினம் சந்தித்து இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போவது என ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications