ஐடி ஊழியர்களுக்கு புதிய சிக்கல்.. டிரம்ப் நிர்வாகத்தின் புதிய பரிந்துரை தான் காரணமா?

அமெரிக்காவில் ஹெச் 1பி விசாவினை பெறுவதற்கு ஏற்கனவே கடுமையாக விதிமுறைகள் விதிகப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளினால் அதிகம் பாதிக்கப்படுவதும், பயன்பெறுவதும் இந்திய ஊழியர்கள் தான்.

ஏனெனில் இன்றளவிலும் அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணிபுரிபவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள் தான். இதனால் தானோ என்னவோ? அமெரிக்காவில் எந்தவொரு முடிவு எட்டப்பட்டாலும், அதன் எதிரொலி இந்திய பங்கு சந்தை வரை காணப்படுகிறது.

அதிக ஹெச் 1பி விசாவினை பெறுபவர்கள்

அதிக ஹெச் 1பி விசாவினை பெறுபவர்கள்

அமெரிக்காவின் இந்த ஹெச் 1பி விசாவினை அதிகம் பயன்படுத்துபவர்கள் அதிகம் இந்தியர்கள் தான். இந்த ஹெச் 1 பி விசாவது நல்ல திறமையுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு விசாவாகும். குறிப்பாக ஐடி துறையில் உள்ள முக்கிய ஊழியர்களுக்கு இந்த விசாவானது அதிகளவில் வழங்கப்படுகிறது. அதிலும் ஹெச் 1 பி விசாவை பெறுவதில் இந்தியர்கள் தான் அதிகம்.

லாட்டரி முறை வேண்டாம்

லாட்டரி முறை வேண்டாம்

டிரம்ப் நிர்வாகம் கணினிமயமாக்கப்பட்ட லாட்டரி முறையில் ஹெச் 1பி விசா வழங்குவதை தடை செய்ய வேண்டும். அதற்கு மாற்றாக ஊதிய அடிப்படையிலான தேர்வு முறைக்கு மாற்றுவதற்கு முன் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரலாறு காணாத அளவு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ள இந்த நிலையில் இந்த பரிந்துரை வந்துள்ளது. மேலும் வேலையினை இழந்து அழுத்தத்தில் உள்ள அமெரிக்க ஊழியர்களுக்கு இது சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு நடவடிக்கை

தேர்தலுக்கு முன்பு நடவடிக்கை

மேலும் இந்த புதிய பரிந்துரை பற்றி பதிலளிக்க, பங்குதாரர்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்படுள்ளதாகவும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்னும் ஒரு வாரத்திற்குள் வரவிருக்கும் நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால்?

புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால்?

டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்தபடி நடைமுறைப்படுத்தப்பட்டால், முதலில் அதிக சம்பளம் வாங்கும் சம்பளதாரர்களை மட்டும் தேர்தெடுக்கும். இது ஹெச் 1 பி விசாதாரர்கள் மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் நலன்களை சிறப்பாக சமன் செய்யும் என்கிறது டிஹெச்எஸ். அதோடு பரிந்துரை செய்யப்பட்ட இந்த கட்டுப்பாட்டின் மூலம் அமெரிக்கர்களுக்கு அவரவர் வாய்ப்பு திரும்ப கிடைக்கும். அமெரிக்க பொருளாரமும் வலுவடையும் என்பது டிரம்ப் நிர்வாக்கத்தின் வாதம்.

ஹெச்1பி விசா திட்டம் துஷ்பிரயோகம்

ஹெச்1பி விசா திட்டம் துஷ்பிரயோகம்

மேலும் இந்த ஹெச் 1பி விசா திட்டம் முதலாளிகள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களால் சுரண்டப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஏனெனில் முதன்மையாக வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தவும், குறைந்த சம்பளம் வழங்கவும் முயன்று வருகின்றன என்று டிஹெச்எஸ் துணை செயலாளார் கென் குசினெல்லி தெரிவித்துள்ளார்.

விசா நடவடிக்கையில் அதிக கவனம்

விசா நடவடிக்கையில் அதிக கவனம்

ஆரம்பத்தில் இருந்தே ஹெச்1பி விசா நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தி வரும் அதிபர் டிரம்ப், கடந்த ஜூன் 31ம் தேதியன்று, டிசம்பர் இறுதி வரை ஹெச் 1பி விசாக்களை தடை செய்வதாக அறிவித்தார். அதற்கான நிர்வாக உத்தரவிலும் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் குடியரசு கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

சம்பளம் அதிகரிக்க வழிவகுக்கும்

சம்பளம் அதிகரிக்க வழிவகுக்கும்

அதிக திறமையுள்ள அதிக சம்பளம் பெறும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த, இந்த நடவடிக்கை முன்னுரிமை அளிப்பதற்கான வழியை இது வழிவகுக்கும். இந்த நடவடிக்கையானது முதலாளிகளை அதிக சம்பளம் அளிக்க ஊக்குவிக்கிறது. அல்லது அதிக சம்பளத்துடன், அதிக திறன் கொண்ட ஊழியர்களை தேர்வு செய்ய இது வாய்ப்பை அதிகரிக்கரிக்கிறது.


மேலும் குறைந்த சம்பளம், குறைந்த திறமைகளுக்கு இந்த ஹெச் 1பி விசா வழங்குவதை தடுக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா அதிபர் ஹெச் 1 பி மற்றும் பிற விசா திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும், விதிகளை கடுமையாக்கியும் வருகின்றார். உதாரணத்திற்கு கடந்த ஏப்ரல் 2017ல், அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள். அமெரிக்கர்களைப் பணியமர்த்துங்கள் என்ற செயலாணையில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. ஆக அப்போதே ஹெச் 1பி விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

 

இந்தியர்களுக்கு பாதிப்பு தான்

இந்தியர்களுக்கு பாதிப்பு தான்

அமெரிக்காவின் இந்த விசா மூலம் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 85,000 பேர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். டிரம்ப் நிர்வாகம் சொல்வது போல் இந்த ஹெச் 1 பி விசா சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், அதில் முதலாவதாக பாதிக்கப்பட போவது இந்தியா தான். ஏனெனில் அமெரிக்க ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் இதன் மூலம் பணிபுரிகின்றனர். மேலும் ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கும் விசா காலம் முடிவடைந்தால், மீண்டும் புதுபிக்க முடியாமல் நாடு திரும்ப நேரிடும்.

இந்தியாவுக்கு சற்று பாதிப்பு தான்

இந்தியாவுக்கு சற்று பாதிப்பு தான்

இதனால் இந்திய ஐடி ஊழியர்கள் மட்டும் அல்ல, ஐடி நிறுவனங்களுக்கும் இது பாதிப்பு தான், ஏன் சொல்லப்போனால் இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் பலத்த வீழ்ச்சி காணலாம். இப்படி சங்கிலித் தொடர்போல இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஒற்றை நடவடிக்கை பெரும் அடியை கொடுக்கலாம். .

கனவும் என்னவாகும்

கனவும் என்னவாகும்

ஆக இந்த பரிந்துரை நடைமுறைக்கு வந்தால். இந்தியா ஐடி ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படலாம். ஏன் ஐடி ஊழியர்களில் பலரின் கனவே அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்பது தான். ஆனால் இந்த நடவடிக்கை மட்டும் அமலுக்கு வந்தால், இந்திய ஐடி ஊழியர்களின் கனவு எப்படி சாத்தியமாகும் என்பது தான் தெரியவில்லை.

விசா ஊழியர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு

விசா ஊழியர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு

ஏனெனில் அமெரிக்கா நிறுவனங்கள் இந்த விசா மூலம் பணியமர்த்துவது, ஒன்று அமெரிக்கர்களை விட, வெளி நாட்டவருக்கு சம்பளம் குறைவு என்பதும் ஒரு காரணம். ஆக நிறுவனங்கள் ஒன்று சம்பளத்தினை ஏற்றிக் கொடுத்தே ஆக வேண்டும். அல்லது அமெரிக்கர்களையே பணியில் அமர்த்தியே ஆக வேண்டும். அதிகம் சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை வெளி நாட்டவர்கள் தான் பணியில் அமர்த்தப்படுவார்களா? இது சாத்தியமானது தானா? இதனால் ஹெச் 1பி விசா தாரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையலாம் என்பதே நிபுணர்களின் கணிப்பு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+