அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் விடுதலை தினமான ஏப்ரல் 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக சீனா பொருட்களுக்கு 54 சதவீதம் வரி விதித்தார். டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் என்ற அச்சம் அதிகரித்தது. இருப்பினும், பரஸ்பர வரி திட்டத்தால் குறிவைக்கப்பட்ட பிற வர்த்தக கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளை விரைவாக தொடங்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
அமெரிக்காவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டது. மேலும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். மேலும் பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தில் உள்ளன. இதனால் பரஸ்பர வரி விவகாரம் பெரிய அளவில் வெடிக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு பொருட்களுக்கு சீனா 34 சதவீதம் வரி விதித்தது.

சீனாவில் பதிலடியால் அமெரிக்கா கொஞ்சம் அடங்கி போகும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் சீனாவின் வரி விதிப்பு டிரம்பின் கோபத்தை மேலும் அதிகரித்தது. எங்களுக்கே வரியா என்று நேற்று டிரம்ப் அதிரடியாக யாரும் எதிர்பாராத நடவடிக்கையை மேற்கொண்டார். டிரம்ப் நிர்வாகம், சீன பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதித்தது. மேலும் இந்த வரி நள்ளிரவுக்கு பிறகு உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.
ஆனால் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு ஒரு மிரட்டல், இதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் மற்றும் இறுதி வரை போராடுவோம் என்று சீனா சபதம் செய்துள்ளது. அதேசமயம், உலகின 2வது பெரிய பொருளாதார சக்தியுடன் (சீனா) பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டோம் என்று அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை தொடர்ந்து தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. சுமார் ஒரு ஆண்டில் முதல் முறையாக S&P 500 இன்டெக்ஸ் 5,000க்கு கீழே முடிவடைந்தது கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று S&P 500 இன்டெக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. தற்போது அதனை காட்டிலும் 18.9 சதவீதம் குறைவாக உள்ளது. தற்போது S&P 500 இன்டெக்ஸ் கிட்டத்தட்ட கரடி (வீழ்ச்சி) சந்தையின் (20 சதவீதம்) அருகில் உள்ளது.
டிரம்ப் பரஸ்பர வரி விதித்தது முதல் S&P 500 இன்டெக்ஸில் உள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு 5.8 லட்சம் கோடி சரிவடைந்துள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications