டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் பெரும் போராட்டத்திற்கு பின்பு ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை திரும்ப கொண்டு வந்திருக்கும் வேளையில், இனி ஒருபோதும் விதிகளை மீறி வரியை விதிக்க கூடாது, அதேபோல் புதிய வரியை விதிக்கவும் திட்டமிட்டு வருகிறது.
ரெசிப்ரோக்கல் வரி 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தாலும் அடிப்படை வரியான 10 சதவீதம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதை உயர்த்த முடிவு செய்துள்ளார் டிரம்ப்.

இதற்காக டிரம்ப் நிர்வாகம் பழைய வர்த்தகச் சட்டத்தைப் பயன்படுத்தி உலகளாவிய இறக்குமதிகளுக்கு தற்காலிகமாக வரிகளை விதிக்கும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், டிரம்ப் நிர்வாகம் 150 நாட்களுக்கு 15% வரை வரிகள் விதிக்கப்படலாம் என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
டிரம்ப்-ன் இந்த நடவடிக்கை, ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு சட்டரீதியான நிச்சயமற்ற நிலை உருவாக்கியிருக்கும் வேளையில், தனது வர்த்தகக் கொள்கையையும், நிலைப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக டிரம்ப் நிர்வாகம் பார்க்கிறது. இதற்கு இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் பழைய வர்த்தகச் சட்டத்தைப் பயன்படுத்தி 150 நாட்களுக்கு 15% வரை வரிகள் விதிக்க, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்பதால் இந்த வழியை ஆய்வு செய்து வருகிறார். இந்தச் பழைய வர்த்தக சட்டத்தில், அமெரிக்க அரசுக்கு வரிகளின் விகிதத்தையும், கால அளவையும் (15% வரை, 150 நாட்களுக்கு) கட்டுப்படுத்தும் உரிமை அளிக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம், டிரம்ப் நிர்வாகம் உலகளாவிய பொருளாதாரத்தில் நீதிமன்ற கட்டுப்பாடுகளை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இது சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளாமல் வரிகளை விதிக்க ஒரு மாற்று வழியை வழங்குகிறது.
டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரிகள், 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் (IEEPA) கீழ் விதிக்கப்பட்டவை, இது தற்போது சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக இந்தத் தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications