Fable 5-க்கு விடிவுகாலம் பொறந்தாச்சு.. டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பண்டிகையை கொண்டாடுங்க..!

செயற்கை நுண்ணறிவு உலகில் கடந்த இரண்டு வாரங்களாக அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்றாக, ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னணி ஏஐ மாடலான Fable 5-க்கு அமெரிக்க அரசு விதித்த தடை விஷயம் தான்.

டிரம்ப் தலைமையிலான அரசு ஆந்திரோபிக் தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து வெளிநாட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து தடை செய்யப்பட்ட இந்த Fable 5 மாடலுக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமெரிக்க அரசு மற்றும் ஆன்த்ரோபிக் நிறுவனத்துக்கு இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Fable 5-க்கு விடிவுகாலம் பொறந்தாச்சு.. டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பண்டிகையை கொண்டாடுங்க..!

15 நாட்களாக முடங்கியிருந்த Fable 5

ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு மாடலான Fable 5, அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டு உத்தரவுக்குப் பிறகு கடந்த 15 நாட்களாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த திடீர் நடவடிக்கையால், அந்த மாடலை நம்பி செயல்பட திட்டமிட்டு இருந்த பல தரப்பினர் பாதிக்கப்பட்டன. இந்த தடை, உலகளாவிய ஏஐ சமூகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மாதம் தொடக்கத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பான அரசின் உத்தரவைத் தொடர்ந்து, Fable 5 மற்றும் Mythos 5 ஆகிய இரு மாடல்களின் பயன்பாட்டையும் ஆன்த்ரோபிக் நிறுவனம் நிறுத்தியது. அமெரிக்க அரசு, இந்த மாடல்களில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் "ஜெயில்பிரேக்" செய்யும் சாத்தியம் இருப்பதாக கவலை தெரிவித்தது.

Also Read

இதையடுத்து, ஆன்த்ரோபிக்கின் மூத்த அதிகாரிகள் நேரடியாக வாஷிங்டனுக்கு சென்று டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக நீடித்த இந்த மோதலுக்கு தற்போது சமரசத் தீர்வு உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், Fable 5 மாடலுக்கான தடையை தளர்த்துவது குறித்து இறுதி முடிவை எடுக்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடைபெற்று வருவதால், அடுத்த வாரமே Fable 5 மீண்டும் பொதுப் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலை உறுதியானால், ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் முக்கியமான ஏஐ மாடல் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இது உலகளாவிய ஏஐ சமூகத்துக்கு பெரிய நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

Mythos 5-க்கு பகுதி அனுமதி

இந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, ஆன்த்ரோபிக்கின் மிகவும் சக்திவாய்ந்த Mythos 5 மாடலை சுமார் 100 நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசு அமைப்புகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அனுமதி முழுமையான பொதுப் பயன்பாட்டிற்கானது அல்ல, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான அமைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரையறுக்கப்பட்ட அனுமதி, அரசின் தேசிய பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு இடைக்கால நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+