இந்தியாவுடன் மோதல்.. பாகிஸ்தானுடன் நெருக்கம்.. என்ன சொல்ல வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளுக்கு நாள் இந்தியாவுக்கு எதிரான தன்னுடைய நடவடிக்கைகளை அதிகமாக்கி கொண்டே வருகிறா.ர் பாகிஸ்தான் இன்று தன்னுடைய சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ஒட்டி அமெரிக்க அரசு வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தி இந்தியாவிற்கு பல்வேறு தகவல்களை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கு வாழ்த்து: வியாழக்கிழமை பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஒட்டி அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டு இருக்கக்கூடிய வாழ்த்துச் செய்தியும் பாகிஸ்தான் அரசின் வர்த்தகம் மற்றும் பயங்கரமாத ஒழிப்பு நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம் என தெரிவித்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 26 பேரைக் கொன்றன.

இந்தியாவுடன் மோதல்.. பாகிஸ்தானுடன் நெருக்கம்.. என்ன சொல்ல வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!!

பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் இந்த நடவடிக்கை உலகையே அதிர்ச்சியில் ஆளாகியுள்ளது. இந்த சூழலில் டிரம்ப் நிர்வாகம் இப்படி ஒரு வாழ்த்து செய்தியை கூறியிருப்பது இந்தியாவிற்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் உடன் பொருளாதார ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் முக்கியமான கனிமங்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரிவுகளில் தொழில் ரீதியான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் சுட்டிக் காட்டி இருக்கிறது .

பாகிஸ்தானை பாராட்டும் டிரம்ப்: ஒரு காலத்தில் பாகிஸ்தான் மீது கடுமையான எதிர்ப்பு மனநிலையில் இருந்த டிரம்ப் தற்போது பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது . தான் முதன்முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது பாகிஸ்தான் அரசை பொய்களின் நாடு என கடுமையாக சாடியிருந்தார் டிரம்ப் தேவையில்லாமல் பாகிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர்களை உதவியாக தந்திருக்கிறது அமெரிக்கா அவர்கள் எங்களை முட்டாளாக்கி இருக்கிறார்கள் பயங்கரவாதிகளுக்கான புகலிடமாக பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கிறது என சாடினார்.

ஏன் திடீர் நெருக்கம்: ஆனால் இந்த முறை அதிபராக பதவி ஏற்ற பின் டிரம்ப் பாகிஸ்தானை பாராட்டும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். டிரம்புக்கு நெருக்கமானவர்கள் அண்மையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.

என்ன காரணம்: அமெரிக்க அரசாங்கத்திற்கும் ட்ரம்பின் தனிப்பட்ட தொழில்களுக்கும் வர்த்தக ரீதியிலான தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கு இப்படி நெருக்கம் காட்டுகிறாரா, இந்தியா ரஷ்யா உறவை எதிர்த்து இப்படி செயல்படுகிறாரா அல்லது பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவது சீனாவுக்கான பதிலடியாக என பல கேள்விகள் எழுகின்றன. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அமெரிக்க மண்ணிலிருந்த படியே நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு என இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அந்த தைரியமும் அந்த அனுமதியும் அவருக்கு எப்படி கிடைத்தது .

இதன் எதிர்காலம் என்ன: இந்தியா மீது 50% வரியை விதித்து டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் பாகிஸ்தானுடன் திடீரென நெருக்கம் காட்டுகிறது. ஆனாலும் டிரம்பின் வெளியுறவு கொள்கைகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மை கொண்டது என்பதால் இது எப்படி செல்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+