அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு ஈரான் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளதாக வீடியோ வாயிலாக தெரிவித்துள்ள பின்பு, ஈரானுக்கு எதிரான சமீபத்திய ராணுவ தாக்குதல் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.
"எனக்கு வேண்டியது மக்களுக்கு சுதந்திரம் மட்டுமே. அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். இது அவரது 'Truth Social' பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிலும், 'வாஷிங்டன் போஸ்ட்' பேட்டியிலும் தெரிவித்தார். ஈரான் மக்களை தங்கள் நாட்டு அரசை மாற்ற அழைத்த டிரம்ப், "இது பல தலைமுறைகளுக்குப் பிறகு கிடைத்த ஒரு வாய்ப்பு" என்றும் கூறினார்.

ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. பல அரசியல்வாதிகள் இது சட்டவிரோதமானது என்றும், அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக செனட்டர் எட்வர்ட் ஜே.மார்கி, "காங்கிரஸ் அனுமதி இல்லாமல் ராணுவ நடவடிக்கை செய்வது தவறு" என்று கடுமையாக விமர்சித்தார். இது அமெரிக்க படையினருக்கும் பொதுமக்களுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
மேலும், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை டிரம்ப் மிகைப்படுத்தி கூறுவதாகவும், 'Operation Midnight Hammer' என்ற தாக்குதலில் ஈரான் அணு திட்டம் முழுமையாக அழிக்கப்பட்டது என்பதற்கு எவ்விதமான ஆதாரம் இல்லை என்றும் மார்கி குற்றம்சாட்டினார்.
இதேவேளையில் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தாமஸ் மாசி கூட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இந்த போரை நான் ஆதரிக்கவில்லை. இது 'America First' கொள்கைக்கு எதிரானது" என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பின்படி, போர் தொடங்குவது போன்ற முடிவுகளுக்கு காங்கிரஸ் ஒப்புதல் தேவை என்றும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் முன் கொண்டு வர முயற்சிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். "உங்கள் பிரதிநிதி இந்த போரை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் "மக்களுக்கு சுதந்திரம்" என்று கூறி ஈரான் மக்களை தூண்டியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலமைப்பு விதிகளை மீறியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளையில் ஈரான் தெஹ்ரானில் அமெரிக்கா-வின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு போராட்டத்தை மக்கள் நடத்தி வருவதாக அலஜசிரா தெரிவித்துள்ளது
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அதிபர் டிரம்ப் எவ்வளவு தூரம் ராணுவ நடவடிக்கை செய்யலாம்? காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் போர் தொடங்க முடியுமா? என்ற கேள்விகள் மீண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முக்கியமாகியுள்ளன.
இந்த சர்ச்சை அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை, அரசியலமைப்பு அதிகார பிரிவு, மத்திய கிழக்கு பகுதியின் எதிர்காலம் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டிரம்பின் இந்த நடவடிக்கை பாதுகாப்பு நோக்கத்துக்காக மட்டுமா அல்லது வேறு அரசியல் காரணங்களுக்காகவா என்ற விவாதம் தொடர்கிறது.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

Israel ரத்த வெள்ளம், Iran குறிவைத்த அணுசக்தி தளம்! முடங்கிய Iron Dome - அதிர்ச்சியில் நெதன்யாகு சொன்ன வார்த்தை

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

குவைத் மீது ஈரான் திடீர் தாக்குதல்.. இஸ்ரேல்-க்கு பதிலடி.. பற்றி எரியும் கச்சா எண்ணெய் ஆலை..!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

புது வருடத்தில் ஈரானை திட்டமிட்டு தாக்கும் இஸ்ரேல்.. பெரும் சோகத்தில் ஈரான் மக்கள்..!

ஈரான் போரால் தலைதூக்கும் புது பிரச்சனை..!! இந்திய மக்களுக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!



Click it and Unblock the Notifications