அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் ரஷ்யாவுடனான உறவையும், வர்த்தக பரிமாற்றங்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், இன்று ரெசிப்ரோக்கல் வரி விதிப்பின் முக்கிய முடிவுகளை அறிவிக்கும் போதும் இந்தியா - ரஷ்யா உறவு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.
இதுமட்டும் அல்லாமல் இந்தியா - ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வதற்காக தனிப்பட்ட வரியை விதிக்கவும் திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார் டிரம்ப். இதனால் ஏற்கனவே ஐரோப்பிய யூனியன் ரஷ்ய மீது விதித்துள்ளது 18 முறை வர்த்தக தடைகளில் இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்திற்கு பல சிக்கல் உருவாகியிருக்கும் வேளையில் தற்போது புதிய பிரச்சனையாக டிரம்ப்-ன் புதிய வரி வெடித்துள்ளது.

டிரம்ப் தனது பதிவில், அமெரிக்கா இந்தியா மத்தியிலான வர்த்தக பற்றாக்குறையை சரி செய்வதற்காக 25 சதவீதம் வரி விதிப்பு செய்யப்படும் என அறிவித்த அவர், இந்தியா எப்போதும் ரஷ்யாவிடமிருந்து பெரும்பாலான ராணுவ உபகரணங்களை வாங்கி வருகிறது மற்றும் சீனாவுடன் இணைந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிபொருள் நுகர்வோராக இந்தியா உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடர்ந்து ரஷ்யா உடன் வர்த்தகம் செய்வது என்பது, உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும் என்ற உலக நாடுகளின் நிலைபாட்டிற்கு முற்றிலும் எதிரானது என்றும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் டிரம்ப் தனது பதிவில், ரஷ்யாவுடான இந்தியாவின் வர்த்தகம் நல்லதல்ல, எனவே, இந்தியா ஆகஸ்ட் 1 முதல் 25% ரெசிப்ரோக்கல் வரியையும், மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக தண்டனை வரியையும் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ஆனால் தண்டனை வரி எவ்வளவு என்பதை டிரம்ப் இந்த பதிவில் தெரிவிக்கவில்லை.
டிரம்ப் அறிவிப்பின் படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 25 சதவீத வரி அமலுக்கு வரும். இதோடு தண்டனை வரி சேர்க்கப்படும் அச்சம் உள்ளது.
தண்டனை வரி அறிவிப்பு, இந்தியாவின் ரஷ்ய உறவுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு கடுமையான நடவடிக்கையாகும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்தியா - ரஷ்யா நட்பு:
இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையிலான நட்பு காலம் காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக சோவியத் யூனியன் உடைந்த பிறகு இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக உறவு பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 1995-இல் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 1.4 பில்லியன் டாலராக இருந்த வேளையில் 2024-25 நிதியாண்டில் 68.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு 10.1 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே இருந்த நிவையில் கடந்த 5 வருடத்தில் 5.8 மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த 68.7 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 4.88 பில்லியன் டாலர் மட்டுமே, ரஷ்யாவிடமிருந்து சுமார் 63.84 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் நிலையாக உயர்ந்து வருகிறது. இந்த வேகம் தொடர்ந்தால் இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகம் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகத்தை தாண்டி முதலீடு என பார்த்தால் ரஷ்யாவில் இந்தியா செய்துள்ள முதலீடு 2011ல் 6.5 பில்லியன் டாலராக இருந்தது இது 2023ல் 16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல், ரஷ்ய அதிபர் புதின் 2024 டிசம்பரில் தெரிவித்தபடி, இந்தியாவில் ரஷ்யாவின் முதலீடு சுமார் 20 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
More From GoodReturns

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வருமானத்தை மறைத்த உணவகங்கள்: சிக்கிய 63,000 உணவகங்கள்! IT டிபார்ட்மெண்ட் அனுப்பிய நோட்டீஸ்!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!



Click it and Unblock the Notifications