டொனால்டு டிரம்ப் தனது முதல் ஆட்சியில் எப்படி தினமும் அதிரடிகளை கிளப்பி வந்தாரோ அதேபோல் 2வது ஆட்சியிலும் தினமும் ஏதாவது ஒரு அறிவிப்பை போட்டி நாடுகளை பாதிக்கும் விதமாகவோ அல்லது முதலீட்டு சந்தையை பாதிக்கும் விதமாகவோ அறிவித்து வருகிறார்.
கடந்த வாரம் முதல் சீனா மீதான வரி விதிப்பு, USAID விவகாரம், அரசு செலவீனத்தை குறைப்பது, அரசு அதிகாரிகளுக்கு ஓய்வு என பல விஷயம் அனல் பறந்த நிலையில், இந்த வாரத்தை டொனால்டு டிரம்ப் இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது புதிய வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது மூலம் அதிரடியாக துவங்கியுள்ளார்.

அதாவது டொனால்டு டிரம்ப் கூறுவதை வைத்து பார்க்கும் போது அமெரிக்காவுக்கு எந்த நாட்டில் இருந்து இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி செய்தாலும் இதற்கு புதியதாக 25% வரிகள் விதிக்கப்படும். இந்த புதிய வரி ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரிகளுடன் கூடுதலாக விதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர், நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற NFL சூப்பர் பவுல் போட்டியை காண விமானம் மூலம் சென்ற போது செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். இரும்பு மற்றும் அலுமினியம் மீதான இந்த புதிய வரிகள் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை இதற்கான அரசு ஆணை வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரிகளுடன் கூடுதலாக, பிற நாடுகள் அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளுக்கு இணையான கூடுதல் வரியை அமெரிக்கா விதிக்க உள்ளதாகவும் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இந்த பதிலடி வரிகள் (reciprocal tariffs) செவ்வாய் அல்லது புதன்கிழமை அறிவிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். "அவர்கள் நம்ம மீது வரி விதித்தால், நாம் அவர்கள் மீது வரி விதிப்போம்" என டிரம்ப் பேசினார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு அதிகம் இரும்பு மற்றும் அலுமினியம் ஏற்றுமதி செய்யும் கனடா அரசு, இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதி வரி குறித்த கூடுதல் விவரங்களோ அல்லது அதிகாரப்பூர்வ தகவல்களோ வெளியாகும் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது என தெரிவித்துள்ளது.
ஜப்பான் நிறுவனமான நிப்பான் ஸ்டீல், அமெரிக்க ஸ்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், இந்த முதலீடுக்கு அனுமதிக்கப்படும் என்றாலும், நிப்பான் ஸ்டீல் அமெரிக்க ஸ்டீல் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்க அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
டொனால்டு டிர்பம்-ன் முதல் ஆட்சிக் காலத்தில் இரும்பு மற்றும் அலுமினியம் மீது முறையே 25% மற்றும் 10% வரி விதித்திருந்தார். இருப்பினும், கனடா, மெக்ஸிகோ, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஜோ பைடன் தலைமையிலான அரசு பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்த வரி இல்லாத இறக்குமதி சலுகை வழங்கியது. புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த வரிகள், ஏற்கனவே உள்ள வரி விலக்கு மற்றும் இறக்குமதி ஒப்பந்தங்களை எவ்வாறு பாதிக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதேபோல் இந்த 6 நாடுகளுக்கும் தொடர்ந்து வரி விலக்கு கிடைக்குமா என்பதும் தெளிவுப்படுத்தப்படவில்லை.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications