அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜூலை 12ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கை, உள்ளூர் உற்பத்தியாளர்களை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கிய வர்த்தக கூட்டாளிகளான மெக்சிகோவும், ஐரோப்பிய யூனியனும் எதிர்கொள்வதற்கான புதிய வர்த்தக சவாலாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், "மெக்சிகோவில் நடைபெறும் போதைமருந்து கடத்தல் மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் உள்ள நீண்டநாள் வர்த்தக சீர்கேடுகளை காரணமாக காட்டி, புதிய வர்த்தக வரிகளை அறிவித்துள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்னரே, உலகளாவிய வர்த்தக பதற்றங்களை அதிகரிக்கும் வகையில், 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனித்தனியாக கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அதிக வரியுடன் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை தவிர்க்க புதிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டுமென அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவின் வர்த்தக நலனை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்படுவதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், இது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் மற்றும் வர்த்தக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
டொனால்ட் டிரம்ப், முன்னதாக ஜப்பான், தென் கொரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடிதம் எழுதி, 25% முதல் 40% வரையிலான இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுத்திருந்தார். இப்போது அந்த பட்டியலை மேலும் விரிவுபடுத்தி, பிரேசில், பிலிப்பைன்ஸ், புருனை, மால்டோவா, அல்ஜீரியா, லிபியா, ஈராக்கு மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகளுக்கும் புதிய கடிதங்களை அனுப்பியுள்ளார்.
பிரேசில் மீது 50% வரி, பிலிப்பைன்ஸ் மீது 20%, புருனை, மால்டோவா மீது 25%, அல்ஜீரியா, லிபியா, ஈராக்கு, இலங்கை மீது 30% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், டிரம்ப் தலைமையில் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் கடுமையான வர்த்தக நிலைப்பாட்டை காட்டுகின்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த வரிகள், புதிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாதபட்சத்தில் உறுதியாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப், மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பவமை நேரடியாக குற்றம் சுமத்தும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்படும் பென்டனில் மற்றும் பிற போதை மருந்துகளின் ஓட்டத்தை முழுமையாக தடுக்க மெக்ஸிகோ தவறிவிட்டது. அதுமட்டுமின்றி, மெக்ஸிகோ அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு பணிகளில் சில முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், மெக்சிகோ போதை மருந்து கொள்ளைச் சங்கங்களை அடக்கத் தவறிவிட்டதாகவும், இவர்கள் வட அமெரிக்காவை ஒரு போதை மருந்து கடத்தல் அரங்கமாக மாற்ற முயற்ச்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதை காரணம் காட்டி, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% இறக்குமதி வரி விதிக்கப்படும் என டிரம்பர் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தவிர, ஏற்கனவே இருக்கும் துறை சார்ந்த வரிகளும் தொடரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் இந்த வரிகளை தவிர்க்க "transshipment" என்ற முறை, அதாவது மூன்றாம் நாடுகள் வழியாக பொருட்களை அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டால், அவை கூட கூடுதலான வரிக்கு உட்படுவதாக எச்சரித்துள்ளார். மெக்சிகோவுக்கு எதிரான இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு போதை மருந்து கடத்தல் மட்டுமே காரணம் அல்ல என்பதையும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பியக் குழுமத் தலைவர் உர்ஸுலா வான் டெர் லெயனுக்குப் (Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில், ஐரோப்பிய யூனியனுடனான நீண்டகால வர்த்தக சீர்கேடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், "நம் இருதரப்பு உறவு வர்த்தகத்தில் சமநிலை கொண்டதல்ல. ஐரோப்பிய யூனியன் தொடர்ந்து பாதுகாப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இதற்கு தீர்வு கிடைக்காது. எனவே, வர்த்தக இழப்புகளில் இருந்து நாம் விலக வேண்டிய நிலை உருவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இந்த 30% என்பது, வர்த்தகச் சீர்கேடுகளை முழுமையாக சரிசெய்ய தேவையான அளவுக்குக் கூட அல்ல. இது வெறும் ஒரு முதல் கட்டப் படியாகும். "நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் வரிகளை உயர்த்துகிறீர்களோ, அதை நாங்கள் விதிக்கும் 30% வரிக்கு மேலும் சேர்க்கப்படும்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications