அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல் சூடுப்பிடித்திருக்கும் காரணத்தால் டிரம்ப் இதில் வெற்ற பெற வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பல அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வருகிறார். ஏற்கனவே டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் எரிபொருள் விலை மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பு அதளபாதாளத்திற்கு செல்லும் என கூறினார்.
இதை தொடர்ந்து அடுத்த அதிரடி அறிவிப்பாக டிரம்ப், நவம்பர் மாதம் நடக்கும் மிட்டேர்ம் தேர்தலில் ரிபப்ளிக் கட்சி நாடாளுமன்றத்தை தக்க வைத்தால் கட்டாயம் ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கு 5000 டாலர் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் என்பதை டிரம்ப் விளக்கவில்லை.

இந்திய ரூபாய் மதிப்பில் 4.75 லட்சம் கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் அளவுக்கான பணத்தை Trump dividend என்ற பெயரில் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் டிரம்ப். மேலும் இந்த நிதியை அமெரிக்காவிற்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடும் விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் டிரம்ப்.
ஏற்கனவே 40 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருக்கும் அமெரிக்க அரசின் கடனுக்கு மத்தியில் எப்படி இது சாத்தியமாகும் என்ற கேள்வி அமெரிக்கா அரசியல் வட்டாரத்தின் மத்தியிலும், அமெரிக்க மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் இருக்கும் வாக்கு உரிமை கொண்ட அனைத்து குடிமக்களுக்கு 5000 டாலர் என்றால் குறைந்தபட்சம் 1 டிரில்லியன் டாலர் அளவிலான செலவு ஏற்படும். இதனால் இதை நடைமுறைப்படுத்துவதும் கடினம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உண்மையில் மிட்டேர்ம் தேர்தலில் டிரம்ப் தலைமையிலான அரசு அந்நாட்டின் நாடாளுமன்றத்தை தக்க வைக்க வேண்டும் என்றும், இதற்கான நம்பிக்கையை மக்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் அளிக்க வேண்டும் என்பதற்காகவே எரிபொருள் விலை குறைப்பு, 5000 டாலர் தொகை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என தெரிகிறது.
இந்தியாவில் மாநில அரசுகளும் சரி, மத்திய அரசும் சரி மக்களுக்கு நேரடி பலன் தரும் திட்டங்கள், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி வாய்ப்பை பலருக்கு உருவாகியுள்ளது. தற்போது இதே பார்மூலாவை டிரம்ப் பயன்படுத்தியிருக்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தியாவில் சுமார் 15 மாநிலங்களில் பல்வேறு பெயரில் நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மத்திய அரசும் பிஎம் கிசான், MGNREGA, PMMVY என பல்வேறு திட்டங்களின் கீழ் பல பிரிவு மக்களுக்கு நேரடி நிதி பலன்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மிட்டேர்ம் தேர்தல் என்றால் என்ன..?
அமெரிக்காவில் மிட்டர்ம் தேர்தல் (Midterm Election) என்பது அந்நாட்டு அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் நடுவில், அதாவது 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேசிய அளவிலான தேர்தல் இது. இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், 100க்கும் மேற்பட்ட செனேட்டர்கள் என பல மாநில தலைவர்கள் வாக்கு அளிப்பார்கள். இதில் வெற்றிப்பெற்றால் மட்டுமே நாடாளுமன்றத்தில் ஆதிக்க நிலை ஆளும் கட்சிக்கு இருக்கும் இல்லையெனில் காங்கிரஸ்-க்கு செல்லும். இதனால் இத்தேர்தலில் வெற்றி பெறுவது டிரம்ப் அரசுக்கு மிகவும் முக்கியம்.
இந்தத் தேர்தல் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் யாருக்கு அதிகாரம் என்பதை தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக அதிபரின் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக்கம் செலுத்தும் எண்ணிக்கை இழந்தால், புதிய சட்டங்களை கொண்டு வந்து அதை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்துவது என்பது கடினமாகிவிடும். போதுமான ஒப்புதல்கள் கிடைக்காத பட்சத்தில் மசோதாக்களும், திட்டங்களும் நடைமுறைப்படுத்துவதில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும் இந்த மிட்டேர்ம் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெல்லும் பட்சத்தில் அதிபரின் திட்டங்களையும், முடிவுகளையும் தனது பெரும்பான்மையை எளிதாக தடுத்துவிட முடியும். இதுமட்டுமா ஆளும் கட்சி கொண்டு வந்த திட்டங்களுக்கான பட்ஜெட்டை கூட குறைக்கலாம், அதிபர்கள், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மீது விசாரணைகளைத் தொடங்கலாம். இதனாலேயே டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றாக வேண்டும் என்ற இலக்கில் உள்ளார்.
ஏற்கனவே டிரம்ப் மீது, ஈரான் போர், காசாவில் இஸ்ரேலுக்கு உதவி, வெனிசூலா மீதான தாக்குதல், விசா கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்கா நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சமுக வலைத்தள பதிவுகள் மூலம் முதலீட்டு சந்தையை திசை திருப்புவது என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் மிட்டேர்ம் தேர்தல் வரலாற்றை பார்க்கும் போது, ஆளும் கட்சி பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் தங்களுடைய ஆதிக்க இடங்களை இழப்பது வழக்கமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications


