அமெரிக்கா: அமெரிக்க அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விதித்த இறக்குமதி வரி நடைமுறைக்கு வந்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்கின்றன எனவே அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் போட்டி வரி விதிக்கப் போகிறது என தொடர்ந்து அறிவித்து வந்தார் டிரம்ப்.
வரி விதிப்பு: முதல்கட்டமாக ஏப்ரல் மாதமே சீனா , இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகபட்ச இறக்குமதியை டிரம்ப் அறிவித்தார். பின்னர் ஆகஸ்ட் மாதம் வரை இந்த முடிவை தள்ளி வைப்பதாகவும் அதற்கு இந்த நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நடத்தியது.

இந்தியாவுக்கு 50% வரி: ஆனால் டிரம்ப் திடீரென இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25% வரி என மொத்தமாக 50% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்ல 60க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அவர் வரியை அறிவித்துள்ளார்.
வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தது: தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கும் விதித்த போட்டி வரி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்து விட்டது என தெரிவித்திருக்கிறார். பல்வேறு நாடுகளும் பல பில்லியன் டாலர்களை அமெரிக்காவிலிருந்து எடுத்துக் கொண்டன அவை அனைத்தும் மீண்டும் அமெரிக்காவை நோக்கியே வரப் போகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

முதலில் இந்தியாவுக்கு 25% வரி: அமெரிக்கா தோற்க வேண்டும் என எண்ணக்கூடிய நீதிமன்றம் தான் இந்த வளர்ச்சியை தடுக்க நினைக்கிறது என்றும் டிரம்ப் சாடி இருக்கிறார். டிரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதலே கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று முதல் அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி என்பது நடைமுறைக்கு வருகிறது, வரும் 27ஆம் தேதி முதல் இரண்டாவது கட்டமாக கூடுதலாக 25 % வரி அதாவது மொத்தமாக 50% வரி என்பது நடைமுறைக்கு வருகிறது.
பிரேசிலுக்கும் 50% வரி: இந்தியா மட்டுமில்லாமல் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 50% வரியை டிரம்ப் விதித்துள்ளார். அல்ஜீரியா, போஸ்னியா ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீத வரியை விதித்து இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்,கம்போடியா கோஸ்டாரிக்கா, ஜப்பான் ,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 இலிருந்து 20% வரை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
சீனா குறித்து 12ஆம் தேதி முடிவு: சீனா மற்றும் மெக்சிகோ மீதான வரி விதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை, சீனாவுக்கான வரி குறித்து வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார். சீனா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்தால் இந்தியாவை போலவே சீனாவும் அதிக வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications