அமெரிக்காவும் ஈரானும் அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் ஈரான் கடல் பகுதியில் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களை நிறுத்தி வைக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரால் நாட்டின் எல்லையில் இருந்து சனிக்கிழமை பகல் நேரத்திலேயே தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல - அமெரிக்க கூட்டணி.
இது ஈரானின் அணு ஆயுத பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சியில் பெரும் தோல்வி அடைந்ததாக பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்தமாக வளைகுடா பகுதியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவின் உதவியுடன் ஈரானுக்கு எதிராக சனிக்கிழமை பகல் நேரத்தில் முதல் தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் முதல் தாக்குதல் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நகரத்தின் மையத்தில் நடந்ததாகவும், அந்நாட்டின் தலைவர் அயதொல்லா அலி கமேனியின் அலுவலகங்கள் அருகே பெரும் புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தாக்குதலில் பங்கேற்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வீடியோ செய்தியில் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார். "சற்று நேரத்துக்கு முன்பு அமெரிக்கா ஈரானில் பெரிய ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. எங்கள் குறிக்கோள் அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காக ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை அழிப்பது" என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்க படைகள் வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு சர்வதேச முதலீட்டு சந்தை பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும், தங்கம், வெள்ளி மீண்டும் உச்சத்தை எட்டும்.
இஸ்ரேல் தாக்குதலின் பின்னணி
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா - இஸ்ரேல் உடன் இணைந்து பல மாதங்களாக திட்டமிட்டு வந்த நிலையில், இன்று தாக்குதலை துவங்கியுள்ளது. இந்த நிலையில் ஈரான் பதில் தாக்குதல் அடிப்படையில் இந்த போரின் தீவிரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்காக அமெரிக்கா தனது கடற்படை, விமான படை ஒன்றிணைந்துள்ளது.
உடனடி ஆக்ஷன்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. ஈரான் ஊடகங்கள் நாடு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாக கூறுகின்றன. தெஹ்ரான் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானில் மொபைல் போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் பயணிகள் விமானங்களுக்கு வான்வெளி மூடப்பட்டுள்ளதாக கூறியது. இஸ்ரேல் விமான நிலையங்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications