அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்கிழமை இரவு வெளியிட்ட சமுக வலைத்தள பதிவில், வெனிசுலாவின் தற்காலிக அரசு 30 முதல் 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை அமெரிக்காவுக்கு வழங்க உள்ளதாகவும், இதற்காக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அறிவித்தார்.
இதை விட முக்கியமாக இந்த கச்சா எண்ணெய் சந்தை விலையிலேயே அமெரிக்காவுக்கு விற்கப்படுவதாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தை அமெரிக்கா அரசே வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்யும், மேலும் இப்பணத்தை வைத்து வெனிசுலா மக்களுக்கும் அமெரிக்காவுக்கும் பயன்படுத்தும் என டிரம்ப் தனது சொந்த சமுகவலைத்தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த மூன்று நாட்களில் இந்த மாபெரும் அறிவிப்பு வந்துள்ளது. இது உலக எண்ணெய் சந்தையை பாதிக்கும் முக்கியமான நிகழ்வாக உள்ளது.
வெனிசுலா கச்சா எண்ணெய் உயர்தரமானது மற்றும் தடை செய்யப்பட்டது. ஆயினும் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த பின்னரும், வெனிசுலாவை கைப்பற்றிய பின்னரும் ஒரு சில நாட்களில் வெனிசுலா எண்ணெய்யின் உற்பத்தியை பெரிய அளவில் உயர்த்தை அதை அமெரிக்க நிறுவனங்கள் வாங்குகிறது.
அமெரிக்காவின் எனர்ஜி பிரிவு செயலர் கிறிஸ் ரைட் இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் சேமிப்பு கப்பல்கள் மூலம் அமெரிக்காவின் துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படும். இந்த 30-50 மில்லியன் பேரல் கச்சா என்பது எண்ணெய் பெரியதாகத் தோன்றினாலும், அமெரிக்கா கடந்த மாதத்தில் தினசரி 20 மில்லியனுக்கும் அதிகமான பேரல்களை பயன்படுத்தியுள்ளது.
இதனால் வெனிசுலாவின் புதிய சப்ளை சிறிய அளவில் மட்டுமே அமெரிக்காவுக்கு உதவும், இதேபோல் இந்த கூடுதல் சப்ளை மூலம் அமெரிக்காவில் எரிபொருள் சேமிப்பை அதிகரிக்க முடியும், இதேபோல் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த முடியும்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு அமெரிக்காவின் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் விலை 1.3 சதவீதம் குறைந்து ஒரு பேரலுக்கு 56.39 டாலர் அளவைத் தொட்டது. காரணம் கூடுதல் சப்ளை கிடைப்பதால் இதன் விலை குறைந்துள்ளது.
இதை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்த தொகையை பயன்படுத்தலாம் என தெரிகிறது. ஏற்கனவே அமெரிக்கா நிறுவனங்களை வெனிசுலாவில் முதலீடு செய்ய டிரமப் அழைத்திருக்கும் வேளையில், அமெரிக்கா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் தொகை டிரம்ப் அரசின் கையில் இருக்கப்போகிறது. இதனால் அமெரிக்க அரசு தனது விருப்பம்போல் வெனிசுலாவில் முதலீடு செய்யும்.
அடுத்தக்கட்டமாக அமெரிக்கா வெனிசுலாவில் இருந்து இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, அரிய உலோகம் போன்றவற்றை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு கொண்டு வரலாம்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications