அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். மேலும் மத்திய கிழக்கு பகுதியில் விரைவில் "பெரும் வலிமை" உருவாகும் என்றும் கூறியுள்ளார். பென்டகன் தற்போது ஈரான் நாட்டின் கடல் பரப்பில் இரண்டாவது விமான தாங்கி கப்பலை அனுப்பியுள்ளது மூலம் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா மத்தியில் ஒருபக்கம் அணு சக்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், மறுபுறம் அமெரிக்க ராணுவம் அந்நாட்டிற்கு அருகில் போர் கப்பல், விமானங்களை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் டிரம்ப்-ன் இந்த பேச்சு பெரும் அச்சத்தை உலக சந்தையில் உருவாக்கியுள்ளது.

டிரம்ப், ஈரான் மீது எடுக்கும் எந்தொரு முடிவாக இருந்தாலும் சரி முதலீட்டு சந்தைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது முதலீட்டாளர்களின் பெரும் கவலையாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை குறைந்து வரும் வேளையில் டிரம்ப் ஈரான் மீது போர் தொடுத்தால் மீண்டும் பெரும் தாக்கத்தை எதிர்கொள்ளும் என முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணு ஆயுத பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் நடைபெறும் போதும், டிரம்பின் கடுமையான பேச்சு மற்றும் ராணுவ நகர்வுகள் உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
டிரம்பின் கடுமையான எச்சரிக்கை
அமெரிக்காவில் நார்த் கரோலினாவின் ஃபோர்ட் பிராக் ராணுவ நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், "47 ஆண்டுகளாக இரு நாடுகள் மத்தியில் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நாங்கள் பல உயிர்களை இழந்தோம். அமெரிக்க ராணுவ வீரர்களின் கால்கள், கைகள், முகங்கள் தாக்குதல் மூலம் சிதைக்கப்பட்டன. இது நீண்ட காலமாக தொடர்கிறது" என்று விமர்சித்தார் டொனால்டு டிரம்ப்.
அமெரிக்கா, ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தையில் அந்நாட்டின் ஏவுகணை திட்டங்கள், பிராந்தியத்தில் ஆயுத குழுக்களுக்கு ஆதரவு, ஈரான் மக்களின் உரிமைகள் ஆகியவற்றையும் சேர்க்க விரும்புகிறது. ஆனால் ஈரான், அணு திட்டத்தில் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்றால் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள மொத்த பொருளாதார தடைகளையும் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதேபோல் ஏவுகணை மற்றும் இதர விவகாரத்தை இந்த பேச்சுவார்த்தையில் இணைக்க மறுத்துள்ளது.

இந்த அணு ஆயுத பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரானை தாக்குவோம் என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது எச்சரித்துள்ளார். ஈரான் அதற்கு பதிலடி கொடுக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரிய போர் ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே கடந்த ஆண்டு ஈரானின் அணு ஆயுத தளங்களை தாக்கியது. இந்த நிலையில் மீண்டும் தாக்கினால் அமெரிக்கா ஈரானில் எதை டார்கெட் ஆக வைக்கும் என்ற கேள்விக்கு டிரம்ப், " அடுத்த தாக்குதலில் தூசு மட்டுமே இருக்கும். இதில் எஞ்சியவற்றை நாங்கள் பிடிப்போம்" என்று பதிலளித்தார். டிரம்ப் இந்த கடுமையான பேச்சு, மத்திய கிழக்கு நாடுகளில் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?



Click it and Unblock the Notifications