இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான 12 நாள் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம், இரு நாடுகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைகுலைந்து போனது. செவ்வாய்க்கிழமை காலையில் டிரம்ப் அறிவிப்பால் சர்வதேச பங்குச்சந்தைகள் தடாலடியாக உயர்ந்தது. ஆனால் போர் நிறுத்த முடிவை மீறி இரு நாடுகளும் தாக்குதல் நடத்திய வேளையில் பங்குச்சந்தைகள் சரிந்தது.
இதனால் கோபமடைந்த டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரானை கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையற்ற தன்மை, உலக பங்குச் சந்தைகள் மற்றும் எண்ணெய் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உருவானது.

கடுப்பான டிரம்ப்:
டிரம்ப் ஜூன் 24 அன்று காலையில் இஸ்ரேல்-ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்தார், ஆனால் அதற்குப் பிறகும் இரு நாடுகள் தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு ஈரான் ஏவுகணைகளை ஏவியதாகவும், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தெஹ்ரான் அருகே உள்ள ரேடார் அமைப்பை தாக்கியதாகவும் தெரிவித்தது.
இஸ்ரேலின் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை தக்கவைக்க விரும்புவதாகவும் நெதன்யாகு கூறினார். ஆனால், ஈரான் இராணுவம், தாங்கள் போர் நிறுத்தத்தை மீறவில்லை என மறுத்தது, இது ஒப்பந்தத்தில் உள்ள ஓட்டையையும், இஸ்ரேலின் போலி வாக்குறுதியையும் அமெரிக்க அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
டிரம்பின் கண்டனம்:
டிரம்ப் அமெரிக்காவில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் மகிழ்ச்சியாக இல்லை," என்று கோபத்துடன் கூறினார். இஸ்ரேல், போர் நிறுத்தம் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட உடனேயே ஈரானை தாக்கியதாகவும், இரு நாடுகளும் தங்கள் செயல்களின் விளைவுகளை உணரவில்லை என்றும் விமர்சித்தார்.
அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் குறித்துல உறுதியான மற்றும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.
இதுக்குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், "இஸ்ரேல் ஈரானை தாக்காது, அனைத்து போர் விமானங்களும் திரும்பி தாயகத்திற்கு செல்லும்," என்று டிரம்ப் பதிவிட்டார். இதன் மூலம் இஸ்ரேல் இனி தாக்காது என்பதை டிரம்ப் இந்த பதிவு மூலம் உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதி செய்துள்ளார்.
முதலீட்டு சந்தையில் தடுமாற்றம்:
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு நடந்த தாக்குதல் மூலம், சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தகம் முடிவில் இஸ்ரேல் பங்குச் சந்தை 4% உயர்ந்து 52 வார உச்சத்தை எட்டியது, மேலும் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா (2.1%), துபாய் (3.1%), மற்றும் கத்தார் (2%) ஆகியவற்றின் குறியீடுகளும் உயர்ந்தன.
ஆனால், இந்தியாவில் சென்செக்ஸ் குறியீடு 1100 புள்ளிகள் வரையில் உயர்ந்து, மீண்டும் தாக்குதல் நடத்திய காரணத்தால் 800 புள்ளிகள் சரிந்து வெறும் 150 புள்ளிகள் உயர்வுடன் 82,000 புள்ளிகளில் முடிவடைந்தது.
கச்சா எண்ணெய் விலை:
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம், டிரம்ப்-ன் போன் கால் ஆகியவற்றின் மூலம் கச்சா எண்ணெய் விலைகள் தற்போது சரிந்தாலும், ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸ் மூடல் குறித்து ஈரானின் நிலைப்பாடு கச்சா எண்ணெய் விலையை எப்போது வேண்டுமானலும் உயர்த்தலாம் என்ற அச்சம் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

ஈரான் போர்: வான்வெளியில் மட்டுமல்ல நீருக்கடியிலும் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது இந்திய ரூபாய் மதிப்பு!! ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு புது சிக்கல்!!



Click it and Unblock the Notifications