இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணையை வெளிநாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. ஈரான், வெனிசுலா என பல்வேறு நாடுகளிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் அமெரிக்காவிற்கும் அந்த நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தியா வேறு வேறு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் நிர்பந்தத்திற்கு ஆளானது.
இந்த நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ரஷ்யா , இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கியது. இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி பெட்ரோல், டீசல் ஆக மாற்றி விற்பனை செய்தன.

இந்தியா இப்படி தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதி உதவி அளிக்கிறது என குற்றம் சாட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்து விட்டதாக சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். தற்போது அதே டிரம்ப் ரஷ்யா, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்ட இந்தியா வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் எனக் கூறியிருக்கிறார்.
அண்மையில் தான் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது. வெனிசுலா நாட்டில் இருக்கும் எண்ணெய் வளங்களை அமெரிக்கா நிர்வகிக்க போகிறது என டிரம்ப் அப்போது அறிவிப்பு வெளியிட்டார். தற்போது கச்சா எண்ணெயை பல்வேறு நாடுகளுக்கும் விற்பனை செய்வதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறார்.
இதன் ஒரு பகுதியாக தான் அவர் இந்தியா வெனிசுலாவின் கச்சா எண்ணெயை வாங்கும் என தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனில் இருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இருந்து வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க உள்ளது, அவர்கள் ஈரானிடம் இருந்து வாங்குவதற்கு பதிலாக வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க போகிறார்கள் நாங்கள் ஏற்கனவே ஒப்பந்தத்தின் கருத்தை உருவாக்கி விட்டோம் என கூறியுள்ளார்.
வெனிசுலா என்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இடைக்கால அதிபர் டெல்சி நான் விரும்புவதை எல்லாம் செய்யும் வரை அந்த பதவியில் இருக்க அனுமதித்துள்ளேன் எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications