அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே டொனால்ட் டிரம்ப் அன்றாடம் செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார். முதலில் பல்வேறு நாடுகளுடனும் வர்த்தக மோதலில் ஈடுபட்டார். பின்னர் ராணுவ மோதலை தொடங்கினார்.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெனிசுலா மீது கை வைத்தார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்து அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானவை என கூறினார். பின்னர் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக கூறினார். மார்ச் மாதத்தில் ஈரான் மீது போர் நடத்தி வருகிறார்.

ஈரான் போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி நடந்த தாக்குதலிலேயே ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இது ஈரானை பெருமளவில் ஆத்திரமடைய வைத்தது. போர் தீவிரமடைந்துள்ள நிலையில் டிரம்ப் ஒவ்வொரு நாளும் மாறி மாறி பேசி வருகிறார்.
அந்த வகையில் ஈரான் போர் தொடர்பாகவும் ஈரானின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாகவும் டிரம்ப் புதிய தகவலை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த சூழலில் ஈரானின் அடுத்த தலைவராக நான் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என ஈரான் பிரதிநிதிகள் சொன்னார்கள் , ஆனால் நான் தான் அந்த பொறுப்பு வேண்டாம் என மறுத்து விட்டேன் என கூறி இருக்கிறார். தற்போது இது தான் சமூக வலைத்தளங்கள் எங்கும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
குடியரசு கட்சிக்கான நிதி திரட்டல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிரம்ப், தற்போது ஈரானில் இருக்கக்கூடிய தலைவர்கள் கமேனி மரணம் அடைந்து விட்டதால் அவருடைய உச்ச தலைவர் பதவியை என்னை தான் ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார்கள். நான் No Thank you, எனக்கு அந்த பதவி வேண்டாம் என கூறிவிட்டேன் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே back channel முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். உள்நாட்டில் பிரச்சினை வந்துவிடும் என்பதற்காக ஈரான் நாட்டுத் தலைவர்கள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
முன்னதாக டிரம்ப் தரப்பில் 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரானிடம் முன்மொழிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் இந்த இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஈரான் அணுசக்தி திட்டங்களை நிறுத்த வேண்டும் , லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் அமெரிக்காவின் கண்டிஷனில் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஈரான் ராணுவமோ அமெரிக்காவுடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் கூறியிருக்கிறது. அரசு தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்த சூழலில் ஈரான் போரை யார் வழி நடத்துகிறார்கள், ஆட்சி செய்பவர்களுக்கு ராணுவத்தினருக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறதா, போர் முடிவினை யார் எடுக்கப் போகிறார்கள் என பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.
More From GoodReturns

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications