அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான மோதல் தினமும் புதிய அச்சத்தை உருவாக்கி வரும் சூழ்நிலையில், டிரம்ப் இன்று மாலை செய்த சம்பவம் முதலீட்டு சந்தையை புரட்டிப்போட்டது.
டிரம்ப் தனது Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு நாட்களாக 'மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள' பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைகள், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் தாக்குதல்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் எரிபொருள் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த ராணுவ தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் பதில்
ஆனால், டிரம்ப் வெளியிட்ட தகவலை Iranian Ministry of Foreign Affairs தெளிவாக மறுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளது. இதேபோல் ஹார்மூஸ் வழிதடத்தை போர் இலக்குகளை அடையும் வரையில் திறக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மூத்த தலைவர்
இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf சமூக வலைதளத்தில் முக்கியமான பதிவை செய்துள்ளார், 'அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. டிரம்ப்-ன் இந்த பதிவு நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட போலி செய்திகள்' எனக் குறிப்பிட்டார்.
இவர் குறிப்பிட்டத்து போலவே டிரம்ப் அறிவிப்பு வெளியான பின்பு கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் சரிந்தது, தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது, அமெரிக்க பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியது. இது அனைத்தும் திட்டமிட்டு செ்யயப்பட்டது என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரே ஈரான் உடன் 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கும் வேளையில் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் முதல் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் வரையில் இத்தகைய பேச்சுவார்த்தை நடக்கவேயில்லை என மறுத்துள்ளனர். இது பெரும் முரண்பாடாக உள்ளது.
ஈரான் தரப்பு, தற்போதைய போர் சூழ்நிலையில் தங்களது இலக்குகள் முழுமையாக நிறைவேறும் வரை எந்த பேச்சுவார்த்தையையும் ஏற்கமாட்டோம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு 'தண்டனை' வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களது முக்கிய கோரிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிகாரிகள், தங்களது உச்சத் தலைவர் மற்றும் மக்களுடன் இணைந்து இந்த இலக்கை அடையும் வரை உறுதியாக நிற்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

குறிவைத்து அடித்த ஈரான்.. 3 இஸ்ரேல் விமானங்கள் நொறுங்கியது..!!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

ஈரான் போர்: டிரம்புக்கு குட்டு வைத்த நட்பு நாடுகள்; எங்கள கேட்டா போர் தொடுத்தீங்க என கேள்வி!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

சவுதி, UAE, கத்தார்-க்கு வார்னிங் கொடுத்த ஈரான்.. இஸ்ரேல் செய்த வேலையால் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு..!

துபாயில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; ஈரான் போர் நீடிப்பதால் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

LPG தட்டுப்பாடு: 24 மணிநேரம் கெடு.. வந்தது புது ரூல்ஸ்.. அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல்..!!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!



Click it and Unblock the Notifications