2026 ஆம் ஆண்டு தொடங்கி மூன்று நாள் தான் ஆகியிருக்கிறது அதற்குள் உலகளவில் ஒரு பெரிய அளவிலான புவிசார் பதட்டம் உண்டாகிவிட்டது . அமெரிக்கா அரசாங்கம் வெனிசுலா நாட்டின் மீது திடீரென ராணுவ தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா ஒரு கம்யூனிச நாடு. வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் எப்போதுமே ஆகாது. இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் இருந்த வண்ணம் உள்ளன. வெனிசுலா மீது பல வர்த்தக தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட காலமாகவே வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் என சூசகமாக தெரிவித்து வந்துள்ளார். இந்த முறை அதனை நடத்தி காட்டிவிட்டார். வெனிசுலா தலைநகர் கராகஸிஸ் வெடிகுண்டு சத்தமும் பயங்கர தாக்குதல் சத்தமும் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. போர் விமானங்கள் பறக்கும் சத்தங்கள் கேட்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெனிசுலா மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ராணுவ நடவடிக்கையை சுட்டிக்காட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கொலம்பியா, கியூபா, ஈரான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா இந்த செயல்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும் என கூறியிருக்கின்றன . வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களையும் அரிய வகை கனிம வளங்களையும் கைப்பற்றும் நோக்கில் டிரம்ப் தன்னை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டுமென தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என வெனிசுலா அதிபர் மதுரோ நீண்டகாலமாக புகார் கூறி வந்தார்.
தன்னை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டின் வளங்களை கைப்பற்ற டிரம்ப் முயற்சி செய்கிறார் என அவர் கூறி வந்தார். இந்நிலையில் தான் அமெரிக்காவின் ராணுவ தாக்குதல் நடத்துள்ளது. வெனிசுலா நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அதிபர் மதுரோவின் மாளிகையை குறிவைத்து இந்த வான்வழி தாக்குதலை நிகழ்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
அமெரிக்க பாதுகாப்பு படையின் சிறப்பு பிரிவான டெல்டா பிரிவினர் இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை சிறை பிடித்து நாடு கடத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்க ராணுவம் விமான விமான நிலையம் மற்றும் துறைமுகங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே வெனிசுலா அரசாங்கம் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவருடைய மனைவியையும் சிறை பிடித்ததற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கா அரசாங்கம் வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க சிறப்பு பாதுகாப்பு படை பிரிவினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார் அவர் செய்த அனைத்து குற்றங்களுக்கும் அவர் தண்டனை அனுபவிப்பார் என கூறி இருக்கிறது. இந்த மோதலில் இந்தியாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என வெனிசுலாவுக்கான முன்னாள் இந்திய தூதர் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார் . அமெரிக்கா வெனிசுலா மீது நடத்தி இருக்கக்கூடிய இந்த தாக்குதல் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை எனக் கூறியிருக்கும் அவர் ஏற்கனவே தான் முதல் முறை அதிபரான போதே டிரம்ப் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டார் இந்த முறை அதனை செய்து காட்டியிருக்கிறார் என கூறியிருக்கிறார் .
வெனிசுலாவுடன் இந்தியாவின் வர்த்தகமும் பெரிய அளவில் இல்லை , அவர்களிடம் நாம் கச்சா எண்ணெயும் வாங்குவதில்லை என்பதால் நம்முடைய நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது என அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே ஐநா பாதுகாப்பாவை கூடி அமெரிக்காவின் இந்த செயல் குறித்து விவாதிக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்து இருக்கிறது. மொத்தத்தில் டிரம்ப் பற்ற வைத்த நெருப்பு வேகமாக எரிய தொடங்கிவிட்டது. இது மேற்கொண்டு தங்கம், வெள்ளி விலைகளை உயர்த்த போகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications