இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிற. ஆனால் இதுவரை இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் என்பது ஏற்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து பல்வேறு நாடுகளும் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்தியாவும் அமெரிக்காவோடு வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரியை விதித்தார். முதலில் 25% இறக்குமதி வரியை விதித்த அவர் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி கூடுதலாக 25% என மொத்தம் 50% வரியை விதித்தார். இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இரண்டு நாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் இதுவரை இந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு கிடைக்கவில்லை. எப்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற தகவலும் தெரியவில்லை. இந்த சூழலில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த டிரம்ப், இந்தியா - அமெரிக்கா இடையே மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட போவதாக தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மீது தான் சிறந்த நன்மதிப்பைக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார் , மோடி என்னுடைய சிறந்த நண்பர் எனக் கூறியிருக்கும் அவர் கூடிய விரைவில் இந்தியாவும் அமெரிக்காவும் மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தப் போகின்றன என சுட்டிக்காட்டி இருக்கிறார். மணிகண்ட்ரோல் தளத்திற்கு அவர் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முதல் கட்டமாக ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாகவும் நீண்ட கால அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாகவும் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு விட்டன. அந்நாட்டு வணிகத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்தியா வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினர் அதேபோல இந்தியாவை சேர்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.
குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் இன்னும் முடிவுகள் எட்டப்படாமல் இருக்கின்றன. அமெரிக்கா அரசாங்கம் அந்நாட்டு வேளாண் பொருட்களுக்கும், பால் பொருட்களுக்கும் இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் என கேட்கிறது ஆனால் அது இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என இந்தியா மறுத்து வருகிறது.
அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்ந்து நிலுவையிலேயே இருப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் காணாமலேயே இருக்கின்றன. இது முதலீட்டாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. மற்றொருபுறம் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த இயங்கக்கூடிய ஜவுளி உற்பத்தியாளர்கள் ,தோல் பொருள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமல் இருப்பது தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் அமெரிக்க வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications