இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 12 நாள்களாக நடந்துவந்த கடுமையான மோதலை முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்டுகளுக்கும் மத்தியிலான போரில் அமெரிக்கா நுழைந்து 3 இடங்களை குறிவைத்து தாக்கியது மூலம் கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரையில் அனைத்திலும் பெரும் பதற்றம் உருவானது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பின்பு அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் விளைவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24, 2025) இஸ்ரேல் - ஈரான் மத்தியில் முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்த போர் நிறுத்தம் இப்போது அமலுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளும் இதை மீறக்கூடாது எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டதாகக் கூறி, ட்ரம்பின் போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தினார்.

என்ன நடந்தது..?
ஜூன் 22, 2025 அன்று, அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணு ஆயுத தளங்களை வான்வழித் தாக்குதல் மூலம் அழித்தது. இதற்கு பதிலடியாக, ஈரான் திங்கட்கிழமை (ஜூன் 23) கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளமான அல் உதேய்ட் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல், மத்திய கிழக்கில் பரந்த அளவிலான போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு
இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், "இஸ்ரேல் மற்றும் ஈரான் ஒரே நேரத்தில் என்னை அணுகி, 'அமைதி' வேண்டும் என்று கூறினர். இப்போது அமைதிக்கான நேரம் என்று நான் உணர்ந்தேன்," எனப் பதிவிட்டார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, "போர் நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது. தயவுசெய்து இதை மீற வேண்டாம்!" என டிரம்ப் மீண்டும் சமுக வலைத்தளம் வாயிலாகவே அறிவித்தார். இந்த ஒப்பந்தம் 24 மணி நேரத்தில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
தொடரும் தாக்குதல்..?
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், இரு நாடுகளிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன. செவ்வாய்க்கிழமை அதிகாலை, இஸ்ரேலின் தெற்கு நகரமான பீர்ஷேபாவில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்தது.
இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் கூறுகையில், ஈரான் ஆறு அலைகளாக ஏவுகணைகளை ஏவியதாகவும், இவை டெல் அவிவ் அருகே வெடித்ததாகவும் கூறியது. அதேநேரம், ஈரானின் வடக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானின் அரசு ஊடகமான SNN, இந்த ஏவுகணைகள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன் ஏவப்பட்டவை என்று கூறியது.
இஸ்ரேல் நிலைப்பாடு:
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை அகற்றிய பிறகு, ட்ரம்பின் போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது," என்று தெரிவித்தார். இருப்பினும், போர் நிறுத்த முடிவில் ஏதேனும் விதி மீறல்கள் ஏற்பட்டால் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
ஈரான் நிலைப்பாடு:
ஈரான், போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், ஈரான் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தும் என தெரிவித்தார்.
இந்த போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் பதற்றத்தைக் குறைத்து, உலகளாவிய பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications