இந்தியாவுக்கு பெரும் நஷ்டம்..? டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை.. இனி ஒவ்வொரு நொடியும் திக் திக்..!!

கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் பெரும் முதலீடுகளையும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிய ஒரு துறை என்றால் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை தான். அதிலும் குறிப்பாக ஆப்பிள் ஐபோன் தயாரிப்பிலும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் டிரம்ப் முக்கியமான எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனத்திற்கும், அதன் சிஇஓ டிம் குக்கிற்கும் விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு பெரும் நஷ்டம்..? டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை.. இனி ஒவ்வொரு நொடியும் திக் திக்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் அமெரிக்காவில் விற்கப்பட வேண்டுமெனில், அவை அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனேவ ஆப்பிள் சிஇஓ டிம் குக்-யிடம் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப் தற்போது வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை டிம் குக்-யிடம் ஏற்கனவே தெரிவித்ததாகவும், இதைப் பின்பற்றாவிட்டால் குறைந்தபட்சம் 25% வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தற்போது எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பை, டொனால்டு டிரம்பின் தனது சொந்த சமுக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவாக வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு ஆப்பிளின் முக்கிய உற்பத்தியாளரான பாக்ஸ்கான் இந்தியாவில் தனது முதலீட்டு வேகத்தை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கிறது.

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் தற்போது அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்கவில்லை. அதன் பெரும்பாலான உற்பத்தி சீனாவில் நடைபெறுகிறது, மேலும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் ஐபோன்கள் (ஆப்பிளின் மொத்த உற்பத்தியில் 15%) தயாரிக்கப்படுகின்றன.

சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி முதலீட்டை செய்ய துவங்கியது இதுவும் டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் எடுக்கப்பட்டவை. ட்ரம்பின் இந்த அறிவிப்பு, ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தி சங்கிலியில் புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

டிரம்ப் அமெரிக்க நிறுவனங்களை உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியதுவம் அளிக்கவும், உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை சாத்தியப்படுத்த வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது முதல் பல முட்டுக்கட்டைகளை தொடர்ந்து விதித்து வருகிறார் டிரம்ப்.

ஒரு வாரத்திற்கு முன்பு, டிரம்ப் டிம் குக்கை இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தி, அமெரிக்காவில் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து தற்போது ஆப்பிள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது ஆப்பிளின் எதிர்காலம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் ஆப்பிளின் முதலீடும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உற்பத்தி வசதிகள் இல்லாத நிலையில், இந்தியா மற்றும் சீனாவில் உள்ள உற்பத்தி மையங்களை அமெரிக்காவுக்கு மாற்றுவது மிகுந்த நிதி செலவுகளையும், நேரம் எடுக்கும் காரியமாகும். இதேபோல் இந்த வரி விதிப்பு எச்சரிக்கை உடன் சேர்த்து ஆப்பிள் ஐபோன்களின் விலையை உயர்த்த அதன் வர்த்தகத்தையும் மோசமாக பாதிக்கலாம். மேலும், இந்தியாவில் ஆப்பிளின் உற்பத்தி மையங்களுக்கு இது ஒரு பின்னடைவாக அமையலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+