நோக்கியா போன்களை தயாரிக்கும் பின்லாந்து நாட்டு நிறுவனமான HMD Global, இந்தியாவைத் தனது ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தை வேகப்படுத்தி வருகிறது. சீனாவிலிருந்து பெரிய அளவிலான உற்பத்தி தளத்தை வைத்திருந்த நிலையில், தனது உற்பத்தி கட்டமைப்பில் பெரிய பகுதியை இந்தியாவிற்கு மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த திடீர் முடிவுக்கு முக்கியமான காரணம் டொனால்டு டிரம்ப் வெற்றி.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமைய உள்ள நிலையில், டிரம்ப் கையெழுத்திடும் முதல் உத்தரவு சீனா மீது 35 சதவீத வரி தான். இதைக் கருத்தில் கொண்டு தான் சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களும், பிற நாட்டு நிறுவனங்களும் வெளியேறத் துவங்கியுள்ளது. இதில் முதல் ஆளாகப் பின்லாந்து நாட்டு நிறுவனமான HMD Global இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கணித்திருந்தது போல் சீனாவில் வெளியேறும் நிறுவனங்களுக்கு இந்தியா தான் புகலிடமாக்க மாறி வருகிறது. அமெரிக்கா சீன மீது விதிக்கும் இறக்குமதி வரிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின்லாந்து நாட்டு நிறுவனமான HMD Global இந்த முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் வலுவான உற்பத்தி தளத்தை அமைப்பதன் மூலம், அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தகப் போர்களின் தாக்கத்தில் இருந்து தப்பித்து விரைவில் தனது விநியோக சங்கிலியை உறுதி செய்ய வேண்டும் என HMD குளோபல் இலக்கு வைத்துள்ளது. இதற்காக HMD, தனது உலகளாவிய சப்ளையர்களுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைக்க ஊக்குவித்து வருகிறது.
இதன் மூலம் HMD வருவது மட்டும் அல்லாமல் தனது பியூச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன்-களுக்கு உதிரிப்பாகங்களை அளிக்கும் சப்ளையர்களையும் இந்தியாவுக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளது. HMD நிறுவனமும் கிட்டத்தட்ட ஆப்பிள் போலேவ செயல்படுகிறது.
HMD நிறுவனம் தயாரிக்கும் பியூச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் மேற்கத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதை இனி இந்தியாவில் உருவாக்கப்படும் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
HMD நிறுவனம் தனது இந்திய உற்பத்தியின் பெரிய பகுதியைக் கையாள டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதோடு இந்தியாவில் பியூச்சர் போன் உற்பத்தித் திறனை விரிவுபடுத்த, Zetwerk-ன் துணை நிறுவனமான Zet Town India உடன் இணைந்துள்ளது.
HMD இன் இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான CEO மற்றும் துணைத் தலைவர் ரவி குன்வர், இந்தியாவை ஒரு முக்கி உற்பத்தி மையமாக மாற்றுவதில் நிர்வாகம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். HMD, சீனாவிலிருந்து இந்தியாவிற்குத் தனது உற்பத்தி நடவடிக்கைகளை படிப்படியாக மாற்ற முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications