இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்கா சென்று புதிதாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப்-ஐ நேரில் சந்தித்து பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேச உள்ளார். டிரம்ப் அரசின் வரி விதிப்புகளும், வர்த்தக கொள்கைகள் குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர். இந்த நிலையில் மோடி அமெரிக்கா செல்லும் முன்பு இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானிக்கு சாதகமாக ஒரு உத்தரவை டிரம்ப் வெளியிட்டு உள்ளார்.
டொனால்டு டிரம்ப் இன்று கையெழுத்திட்டு உள்ள நிர்வாக உத்தரவில், அந்நாட்டில் நீண்ட காலமாக அமலில் இருக்கும் ஒரு சட்டத்தை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க நீதித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கும் கௌதம் அதானிக்கும் என்ன தொடர்பு..? அதானிக்கு எப்படி நன்மை அளிக்கிறது..? என்பதை விரிவாக பார்ப்போம் வாங்க.

டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ள சட்டம், 1977 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டம் (Foreign Corrupt Practices Act - FCPA). இந்த தட்டம் அமெரிக்க நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் வணிகத்தைப் பெறுவதற்காக அல்லது தக்கவைத்துக் கொள்வதற்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுக்கிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் பல முக்கிய வழக்குகளில் அமெரிக்க நீதித்துறையால் கையாளப்பட்டு வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவு, குறிப்பாக இந்தச் சட்டத்தின் அமலாக்கத்தை நிறுத்தி வைக்கக் கூறுவது கௌதம் அதானிக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிரான அமெரிக்காவில் சமீபத்தில் லஞ்சம் கொடுத்து வர்த்தகத்தை கைப்பற்றியதாக குற்றச்சாட்டு உடன் வழக்கு தொடுக்கப்பட்டது இந்த Foreign Corrupt Practices Act - FCPA சட்டத்தின் கீழ் தான்.
கடந்த ஆண்டு ஜோ பைடன் அதிபராக இருந்த போது, அமெரிக்க நீதித்துறை அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2,100 கோடி) லஞ்சம் கொடுத்து, சோலார் மின்சக்தி ஒப்பந்தங்களை பெற்றதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது. இந்த சட்டவிரோதச் செயல் அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து மறைக்கப்பட்டதாகவும், அதானி குழுமம் இந்த திட்டத்திற்காக பில்லியன் டாலர்களை திரட்டியதாகவும், இது அமெரிக்க அரசு விதிமுறைக்கு புரம்பானது என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க முதலீட்டாளர்கள் அல்லது அமெரிக்க சந்தைகளுடன் தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் ஊழல் செய்தால் FCPA சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் வழக்கு தொடரால். இதன் அடிப்படையிலேயே கௌதம் அதானி மீது இந்த வழக்கு பாய்ந்துள்ளது.
டொனால்டு டிரம்ப் இன்று கையெழுத்திட்ட உத்தரவில் FCPA பயன்பாட்டை 180 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது மட்டும் அல்லாமல், மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது அதானி குழுமத்திற்கு ஒரு தற்காலிக நிவாரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications