அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. ஈரான் போரை முடித்துக்கொள்ள தீவிர ஆலோசனை.. ஓவர் நைட்டில் மாறியது என்ன?

உலக நாடுகளுக்கு முக்கிய எரிபொருள் சப்ளையராக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியில் நீடித்து வரும் போர் கடந்த 3 நாட்களாக தீவிரம் அடைந்து வரும் வேளையில் டிரம்ப் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

ஈரான் உடனான போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது உயர்மட்ட ஆலோசகர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

 அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. ஈரான் போரை முடித்துக்கொள்ள தீவிர ஆலோசனை.. ஓவர் நைட்டில் மாறியது என்ன?

ஈரான் போர் 7வது மாதமாக தொடரும் வேளையில் கச்சா எண்ணெய், விலை , பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நவம்பர் மாதம் மிட்டேர்ம் தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே வட்டி விகித உயர்வு நிச்சயமான நிலையில் போர் மற்றும் போருக்கான செலவுகள் பெரும் நெருக்கடியாக அமெரிக்க பொருளாதாரத்திற்கு மாறி வருகிறது. இந்த நிலையில் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

டிரம்ப் தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், ஈரானில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைவிட, பொருளாதார தடைகள், வர்த்தக தடைகள் மூலம் ஈரானை முடக்க முடியும் என்பது டிரம்பின் அணுகுமுறையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடும் நிலைக்கு வரை அல்லது ஈரான் ஆட்சி பலவீனமடையும் வரை பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும் வகையில் டிரம்ப் இக்கூட்டத்தில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேநேரத்தில் இன்று காலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக சர்ப்ரைஸ் அட்டாக்-ஐ ஈரான் செய்துள்ளது. ஈரான் ராணுவம் குவைத் நாட்டில் இருக்கும் அமெரிக்க தங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதியுள்ளது. நேற்று இரவு மட்டும் 5 நாடுகளில் 7 அமெரிக்க தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்க பதலிடி கொடுக்கவில்லை என்பது தான்.

இதனை தொடர்ந்து போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளையில் நேற்று அமெரிக்க பாதுக்காப்பு துறை செயலாளர் பீட் செகத் ஈரான் மீது விரைவான மற்றும் கடுமையான தாக்குதலை நடத்த திட்டமிட்டு முக்கிய தாக்குதல் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமெரிக்க பாதுகாப்பு துறை கூடுதலாக ராணுவ வீரர்களை அடுத்த ஆண்டு வரையில் அனுப்ப தயாராகி வருகிறது.

தற்போது வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்கா ராணுவ தளத்தில் சுமார் 50000 ராணுவ வீரர்களும், 19 போர் கப்பல், விமான தாக்குதல் படைகள் என பல்வேறு சிறப்பு படைகளும் உள்ளனர்.

இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் டிரம்ப்-ன் திடீர் ஆலோசனை கூட்டம், உலக நாடுகளை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருபக்கம் ஈரான் மீது பொருளாதார தடைகள் மூலம் அந்நாட்டை முடக்கி, போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருகிறார். மறுபக்கம் ஈரான் முதல் முறையாக தானாக முன்வந்து வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளங்களை தாக்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+