ஈரானில் போர் தொடங்கி கிட்டதட்ட ஒரு மாத காலம் ஆகிவிட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி இன்று வரை ஈரானில் போர் நீடித்து வருகிறது. அமெரிக்காவும் , இஸ்ரேலும் நீண்ட காலமாகவே ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கிறது. இது உலகிற்கே ஆபத்தானது என தொடர்ச்சியாக கூறிவந்தன. இந்த சூழலில் தான் திடீரென பிப்ரவரி 28ஆம் தேதி இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது கூட்டு ராணுவ தாக்குதலை தொடங்கின.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் நாட்டு தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். கமேனி மரணத்தால் அதிர்ச்சி அடைந்த ஈரான் இஸ்ரேல் மீதும் சுற்றி இருக்கக்கூடிய நாடுகள் மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்தது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை அடைத்து தன்னுடைய பவரை காட்டியது.

இதனால் ஒரு மாத காலமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே இந்தியா , பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற பல்வேறு நாடுகளிலும் எல்பிஜி , பெட்ரோல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தான் டிரம்ப் மிக முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறியிருக்கும் அவர் ஈரான் அரசின் கோரிக்கையின் பேரில் ஈரான் எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை ஏப்ரல் 6ஆம் தேதி வரை அதாவது அடுத்த பத்து நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளேன் எனக் கூறியிருக்கிறார். தொடர்ந்து இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருகின்றன என சுட்டிக்காட்டி இருக்கும் டிரம்ப், பேச்சுவார்த்தை நடக்கவில்லை என யார் வேண்டுமானாலும் கூறட்டும் ஆனால் உண்மையில் பேக் சேனல் முறையில் பேச்சு வார்த்தைகள் சிறப்பாகவே நடக்கின்றன என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்கா தரப்பில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் , அணுசக்தி திட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச போர் நிறுத்த திட்டம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் மூலம் இது ஈரான் தரப்பிற்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஈரான் தரப்பில் இரண்டு விதமான கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
ஈரான் நாட்டு ராணுவம் அமெரிக்காவுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை, தாக்குதல் தான் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் எனக் கூறுகிறது. அதேவேளையில் அரசாங்கத்தில் இருப்பவர்கள் அமெரிக்காவின் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியானது.
ஈரானில் கமேனி மரணத்தை அடுத்து அவருடைய மகன் மொஜ்தபா கமேனி உச்சபட்ச தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் இதுவரை பொதுவெளியில் அவர் தென்படவில்லை தாக்குதல்களில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. அது தவிர ஈரானின் பல்வேறு முக்கிய தலைவர்களும் தாக்குதல்களில் இறந்துவிட்டனர். இதனால் தற்போது அமெரிக்கா ஈரானை சேர்ந்த யாரிடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்ற நடத்தி வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே வேளையில் ஈரான் போரை வழிநடத்துவது யார் , ராணுவமும் அரசாங்கமும் மத தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்களா என பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் தொடர்ச்சியாக ஈரான் இஸ்ரேல் மீதும் சுற்றி இருக்கக்கூடிய நாடுகளில் இருக்கக்கூடிய கட்டமைப்புகள் மீதும் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. இந்தியா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. அதே வேளையில் நிலைமையை சரி செய்ய இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி கொள்முதலை அதிகப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!



Click it and Unblock the Notifications