உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு அமெரிக்க பொருளாதாரத்தையே பெரும் சிக்கலில் தள்ளியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு முக்கிய முடிவை பரிசீலித்து வருகிறார். கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தற்காலிகமாக நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
Fox Business சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் பேசுகையில், தற்போது சர்வதேச கடலில் கையிருப்பாக உள்ள சுமார் 140 மில்லியன் பேரல் ஈரான் எண்ணெயை சந்தை வர்த்ககத்திற்கு திறந்துவிட அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். இது சுமார் 10 முதல் 14 நாட்களுக்கு தேவையான உலகளாவிய எண்ணெய் சப்ளையை வழங்கக்கூடும் என அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை, குறுகிய காலத்திற்கு எண்ணெய் விலையை குறைக்கும் ஒரு அவசர முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், 2016 முதல் டொனால்டு டிரம்ப் கடைப்பிடித்து வந்த 'Maximum Pressure' என்ற கடுமையான தடைக் கொள்கையில் இருந்து ஒரு பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த கடுமையான கொள்கை மூலம் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்தி அதன் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது அதே எண்ணெயை சந்தையில் கொண்டு வந்து விலை குறைப்பது என்ற யோசனை, அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்டுள்ள அந்தர் பல்டியை காட்டுகிறது.
எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்கா-ஈரான் மோதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பாதிப்பு காரணமாக உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை போர் முன் இருந்த $79 இலிருந்து $119 வரை உயர்ந்து, தொடர்ந்து $100க்கு மேல் நிலைத்துள்ளது.
இதன் மூலம் 65% வரை உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை உடனடியா சரி செய்ய வேண்டும் என்பதற்காக டிரம்ப அரசு ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அனுமதித்த கையோடு தற்போது ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையையும் நீக்குகிறது.
அமெரிக்காவில் எரிபொருள் விலை
ரஷ்யா, ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை டிரம்ப் நீக்க மற்றொரு முக்கிய காரணம் அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடந்த 30 ஆண்டுகளில் இரண்டாவது உச்ச நிலையை எட்டியுள்ளது. ஒரு காலனுக்கு $2.9 இருந்த விலை தற்போது $3.8 ஆக உயர்ந்துள்ளது. இது 2022 ரஷ்யா-உக்ரைன் போர் காலத்தை விட அதிகமான உயர்வாகும்.
இந்த எரிபொருள் விலை உயர்வு, ஏற்கனவே தட்டிதடுமாறி வரும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
நன்மை
ஈரான் மீது தடைகள் தளர்த்தப்பட்டால், குறுகிய காலத்தில் எண்ணெய் விலை குறையலாம். ஆனால் அதே நேரத்தில், ஈரானுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. இது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கலவையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மொத்தத்தில், எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அமெரிக்கா எடுக்கும் இந்த நடவடிக்கை குறுகிய காலத்தில் சந்தைக்கு நிவாரணம் அளிக்கக்கூடும். ஆனால் இது நீண்டகால கொள்கை மாற்றமாக மாறுமா, அல்லது தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கும் என்கிற கேள்வி தொடர்கிறது. உலகளாவிய சந்தைகள் இந்த முடிவை நெருக்கமாக கவனித்து வருகின்றன.
More From GoodReturns

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?



Click it and Unblock the Notifications