அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரி மூலம் 57 நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20-50% வரி விதித்து, உலக வர்த்தகத்தை பதற்றமடையச் செய்தார். இந்தியாவுக்கு 26%, கனடா-மெக்ஸிகோவுக்கு 25%, சீனாவுக்கு 125% வரி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெரும் ஆலோசனைக்கு பின்பு டிரம்ப் அரசு இந்த ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்கள் ஒத்திவைத்தது. இந்த 90 நாள் காலக்கெடு ஜூலை 9-ல் முடிவடைய உள்ள வேளையில், இதை மீண்டும் நீட்டிக்கப்படலாம் என வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட் கடந்த வாரம் தெரிவித்தார். இதை டிரம்ப் மறுக்கும் வகையில் முக்கியமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் 'சண்டே மார்னிங் ஃபியூச்சர்ஸ் வித் மரியா பார்டிரோமோ' நிகழ்ச்சிக்காக, வெள்ளிக்கிழமை ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார். அதில் ஜூலை 9-ஆம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொள்ளாத நாடுகளுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிகளை தவிர்க்க முடியாது என்று கூறினார். மேலும் அந்த கெடுவை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "காலக்கெடுவை நீட்டிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை தேவைப்பட்டால் அதை செய்யலாம், அது ஒரு பெரிய விஷயமில்லை" என்றார்.
முன்னதாக டிரம்ப் வெள்ளிக்கிழமை அன்று ரெசிப்ரோக்கல் வரி விதிக்கும் ஜூலை 9ஆம் கெடு தேதியை நீட்டிப்பது அல்லது குறைப்பது உட்பட "நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று கூறியிருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 'உலக நாடுகளுக்கு வாழ்த்துக்கள், இனி 25% வரி செலுத்த வேண்டும்' என்று கூறினார்.
ஜனவரி 20, 2025 அன்று இரண்டாம் முறையாக அதிபரான டிரம்ப், முதல் நாளிலேயே இறக்குமதி வரிகளை அறிவித்தார். பிப்ரவரி 1, 2025 முதல் கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.
இதை தொடர்ந்து ஏப்ரல் 2-ல் "விடுதலை நாள்" என பெயரிடப்பட்ட ரெசிப்ரோக்கல் வரி, அனைத்து இறக்குமதிகளுக்கு 10% அடிப்படை வரியையும், 57 நாடுகளுக்கு 20-50% வரையிலான வரிகளையும் விதித்தது. இதில் இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34%, தாய்லாந்துக்கு 36%, கம்போடியாவுக்கு 49% வரி அடங்கும்.
டிரம்பின் வரி அறிவிப்புக்கு பதிலடியாக, சீனா அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தது. இதற்கு எதிராக, டிரம்ப் சீன இறக்குமதிகளுக்கு 125% வரை கூடுதல் வரி விதித்தார். ஆனால் சீனாவின் அரிய உலோக ஏற்றுமதி தடை உத்தரவு அமெரிக்காவை தடுமாற செய்தது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் சீனா மீதான அமெரிக்க அரசின் அதிரடிகள் குறைந்தது.
இந்த வரி மோதல், உலக வர்த்தகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 26% வரி, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சவாலாக உள்ளது, குறிப்பாக ஜவுளி, மருந்து, மற்றும் தொழில்நுட்ப பொருட்களுக்கு அதிக பாதிப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள், 26% வரியால் ஏற்படும் செலவு உயர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, இது லாப அளவுகளை கடுமையாக பாதிக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியா- அமெரிக்கா மத்தியில் இன்னும் எவ்விதமான சமரசமோ அல்லது வர்த்தக ஒப்பந்தமோ நடக்கவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications