மேற்காசியப் போர் தீவிரமடைந்து வரக்கூடிய சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்திருக்கக்கூடிய ஒரு பேட்டி போரை இன்னும் தீவிரமடைய வைத்திருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு மேலாக ஈரானின் போர் நடைபெற்ற வருகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன, பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மீதும் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்திய வண்ணம் இருக்கிறது. இந்தப் போர் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வரக்கூடிய சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போர் குறித்து பைனான்சியல் டைம்ஸ்க்கு முக்கியமான ஒரு பேட்டியை அளித்திருக்கிறார்.

அதில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகளை கைப்பற்ற தான் ஆர்வமாக இருப்பதாக கூறி இருக்கிறார். உண்மையை கூற வேண்டும் என்றால் ஈரானில் இருக்கக்கூடிய எண்ணெய் கட்டமைப்புகளை கைப்பற்றுவதை நான் விரும்புகிறேன் எனக் கூறியிருக்கிறார். அமெரிக்காவில் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ஆனால் அவர்கள் முட்டாள்கள் என கூறியிருக்கிறார்.
ஜனவரியில் எப்படி அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்து அந்நாட்டு எண்ணெய் வளங்கள் அமெரிக்காவுக்கு சொந்தம் என அறிவித்ததோ அதேபோன்ற ஒரு நடவடிக்கை ஈரானில் எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என டிரம்ப் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். எனவே அமெரிக்கா ஈரானின் கார்க் தீவினை கைப்பற்றுவதில் தீவிரமாக கவனம் செலுத்துகிறதோ என்று சந்தேகம் டிரம்ப் பேட்டியின் மூலம் எழுந்திருக்கிறது.
இது தவிர அமெரிக்கா தன்னுடைய ராணுவ வீரர்களை மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக அதிகப்படுத்திய வண்ணம் இருக்கிறது. எனவே அமெரிக்கா கார்க் தீவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரண்டையும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தரை வழி தாக்குதலை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே ஈரான் நாட்டு அரசு அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈரானில் கால் பதித்தால் பெரிய பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உங்கள் வீரர்களுக்காக எங்கள் வீரர்கள் காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளது.
இந்த சூழலில் கார்க் தீவினை கைப்பற்றும் எந்த ஒரு நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டாலும் ஈரான் மிகக் கடுமையாக தங்களுடைய பதில் தாக்குதலை தொடுக்கும். இந்த போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும். ஈரான் போர் பல மாதங்கள் நீடிப்பது இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு நல்ல தல்ல. இதனால் விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சினைகளை கோடிக்கணக்கான மக்கள் சந்திக்கும் சூழல் உண்டாகும்.


Click it and Unblock the Notifications