ஜனவரி மாதம் முழுக்க வெனிசுலா தலைப்பு செய்தியாக இருந்து வரும் வேளையில், மீண்டும் ஒரு முறை முக்கிய செய்தியாக மாறியுள்ளது. டிரம்ப் உத்தரவின் படி அமெரிக்க ராணுவம் வெனிசுலா-வை தாக்கி அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதேவேளையில் அமெரிக்கா வெனிசுலா கச்சா எண்ணெய் வளத்தை மொத்தமாக கைப்பற்றி அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் கட்டுப்பாட்டை கொண்டுள்ளார் டிரம்ப்.
இந்த நிலையில் வெனிசுலா-வின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ சமீபத்தில் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ-வின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயக நாடாக மாற்றி, அந்நாட்டு மக்களுக்கான உரிமையை பெற்றுதருவதற்காக பெரும் போராட்டம் நடத்தி வந்தார்.

இவரின் போராட்டத்தை பெருமைப்படுத்தும் விதமாக மரியா-வுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது கூட வெனிசுலாவில் பதுங்கி இருந்த அவர், ரகசியமாக தான் அந்நாட்டை விட்டு வெளியேறி நார்வே நாட்டிற்கு சென்று நோபல் பரிசு பெற்றார். இத்தகைய சிறப்பு மிக்க நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ தற்போது டிரம்ப்-க்கு பரிசாக அளித்துள்ளார்.
உண்மையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மற்றொரு நபருக்கு வழங்க முடியுமா..? அல்லது நோபல் பரிசை ஒருவரிடம் இருந்து வாங்க முடியுமா..? மரியா கொரினா மச்சாடோ-விடம் இருந்து டிரம்ப் பெற்றுள்ள நோபல் பரிசின் தன்மை என்ன..?
மரியா கொரினா மச்சாடோ
நிகோலஸ் மதுரோவின் கைதுக்கு பின்பு முதல் முறையாக மரியா கொரினா மச்சாடோ வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்த மரியா, தான் பெற்ற நோபல் பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் வழங்கியதாக அறிவித்தார்.
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது இந்த பதக்கத்தை அவருக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறியது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. ஆனால் நோபல் பரிசு வழங்கும் நோர்வே நோபல் கமிட்டி இந்த சர்ச்சைக்கு முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளது.
மரியா கொரினா மச்சாடோ தனது நோபல் பரிசை டிரம்ப்க்கு வழங்கியதை, அமெரிக்கா-லத்தீன் அமெரிக்க சுதந்திர போராட்டங்களின் வரலாற்றுடன் ஒப்பிட்டு இந்த பரிசு வழங்கியதாக விளக்கினார். மேலும் டிரம்ப் தான் மரியா கொரினா மச்சாடோ-விடம் இருந்து நோபல் பதக்கத்தை பெற்றதாக சமூக ஊடகத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
டிரம்ப் ஹேப்பியோ ஹேப்பி
டிரம்ப் கூறுகையில் "மரியா தனது நோபல் பதக்கத்தை எனக்கு வழங்கினார். அதை நான் செய்த பணிக்கான அங்கீகாரம் என நம்புகிறேன். இது பரஸ்பர மரியாதையின் அற்புதமான அடையாளம். நன்றி மேரியா!" என்று அவர் பதிவிட்டார். மேலும் டிரம்ப் பல நாடுகளின் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என கூறிவந்தார், பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் டிரம்ப்-ஐ பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையிடம் கூறுகையில், டிரம்ப் அந்த பதக்கத்தை தானே வைத்திருக்க திட்டமிட்டுள்ளார். டிரம்ப் முன்பு பலமுறை தனக்கு நோபல் அமைதி பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர். மச்சாடோ பரிசு பெற்றபோது அதை அவர் கேலியாகவும் விமர்சனம் செய்தார் டிரம்ப்.
நோர்வே நோபல் கமிட்டி விளக்கம்
இந்த விஷயத்திற்கு பின்பு நோர்வே நோபல் கமிட்டி தானாக முன்வந்து X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ஒரு முறை கமிட்டி முடிவு செய்து நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டுவிட்டால் அதை ரத்து செய்யவோ, பகிரவோ, மாற்றவோ முடியாது. விருது பெற்றவரின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்" என்று விளக்கியது. இதனால் பதக்கம் தற்போது டிரம்ப் கைக்கு மாறினாலும் பரிசுக்கு உரியவர் என்றென்றும் மரியா தான் என்பதும் நோர்வே நோபல் கமிட்டி தெளிவுபடுத்தியது.
நோபல் பதக்கங்களை விற்க முடியுமா..?
நோபல் பதக்கங்கள் பல சமயங்களில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. 2022-ல் ரஷ்ய பத்திரிகையாளர் டிமித்ரி முரடோவ் தனது நோபல் பதக்கத்தை 103.5 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்து உக்ரைன் குழந்தைகளுக்காக நிதி திரட்டினார். 2014-ல் ஜேம்ஸ் வாட்சன் தனது DNA கண்டுபிடிப்புக்கான பதக்கத்தை 4 மில்லியன் டாலருக்கு விற்றார்.
ஆனால் எல்லா நேரத்திலும் இந்த நோபல் பதம் பெரும் தொகைக்கு விற்கப்படுகிறதா என்றாள் இல்லை. பல சமயம் சிறிய தொகைக்கு கூட விற்கப்பட்டு உள்ளது.
நோபல் பதக்கம் 1980களிலிருந்து 18 காரட் தங்கத்தில் செய்யப்படுகிறது. பதக்கத்தின் பொருள் மதிப்பு குறைவாக இருந்தாலும், இதன் மதிப்பு மிக அதிகம்.
டிரம்ப் வைத்துள்ள நோபல் பரிசு
மச்சாடோவின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக அர்த்தம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால் டிரம்ப் இதை தனிப்பட்ட அங்கீகாரமாக ஏற்றுக்கொண்டுள்ளார். நோபல் கமிட்டியின் விதிகளின்படி பரிசின் உரிமை மாற்ற முடியாது, என்பதால் டிரம்ப் கையில் இருக்கும் நோபல் பதக்கம் வெறும் தங்க நாணயம் மட்டுமே.
More From GoodReturns

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் மிரட்டல்.. ஈரான் நாட்டில் பெரிய அலை வரபோகுது.. பரபர அறிவிப்பு..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications