அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு மூலம் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதித்து பயமுறுத்தினார். பின்னர் இந்த வரியை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார், இந்த 90 நாள் கெடு என்பது ஜூலை 9 முடியும் வேளையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் அரசு இந்த ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை அமலாக்கம் செய்யும் காலத்தை மீண்டும் நீட்டிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் இந்த வரியை வைத்து உலக நாடுகளுக்கு பூச்சாண்டி காட்டி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏப்ரல் 2ஆம் தேதி இந்த ரெசிப்ரோக்கல் வரி விதித்ததில், வீட்டில் பேன் ஸ்விட்ச் ஆன் ஆப் செய்வது போல் அமலாக்கம் செய்து குறித்த முடிவை மாறி மாறி அறிவித்து வருகிறார். இந்த நிலையில் ரெசிப்ரோக்கல் வரி அமலாக்கம் செய்யவதற்கான டெட்லைன் நெருங்கி வரும் வேளையில் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட் பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், "ரெசிப்ரோக்கல் வரி அமலாக்கம் செய்வதற்கான காலக்கெடு முக்கியமல்ல, முடிவு அதிபரியிடம் உள்ளது," என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் "இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம், ஆனால் இறுதி முடிவு அதிபர்யைப் பொறுத்தது," என்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த நீட்டிப்பு, உலகளாவிய பொருளாதார உறவுகளை மறுவரையறை செய்யலாம்.
டிரம்பின் வரி கொள்கை, அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கவும், வெளிநாட்டு இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபராக ஜனவரி 20, 2025 தேதி பதிவியேற்றார். முதல் நாளிலேயே பல முக்கியமான அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமாக கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும இது பிப்ரவரி 1 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என அறிவித்தார். இதை தொடர்ந்து பிப்.1 ஆம் தேதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியும் விதிப்பதாக அறிவித்தார் டிரம்ப்.
டிரம்ப் "விடுதலை நாள்" என்ற பெயரில் ரெசிப்ரோக்கல் வரிகளை ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவித்தார், இதில் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து இறக்குமதிகளுக்கு 10% அடிப்படை வரி மற்றும் 57 நாடுகளுக்கு 20% முதல் 50% வரை வரிகள் விதிக்கப்பட்டது. உதாரணமாக சீனா 34%, தாய்லாந்து 36%, கம்போடியா 49%, இந்தியாவுக்கு 26% வரி விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வரிக்கு எதிராக சீனா அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்த நிலையில் டிரம்ப் சீன பொருட்களுக்கு 125 சதவீதம் வரையில் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications