ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடிய நாடுகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் அமெரிக்க அரசு தீவிரமாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு 500% இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் டிரம்பின் முயற்சிகள் இதுவரை முழு பலன்களை தரவில்லை. இதற்கிடையே அச்சுறுத்தி காரியத்தை சாதிக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவை தண்டிக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினர் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடிய நாடுகளை தண்டித்தால் அந்த நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ளும் எனவே ரஷ்யாவிற்கு எண்ணெய் விற்பனை மூலம் வருமானம் கிடைக்காது. இதன் காரணமாக அந்த நாடு போர் நிறுத்தத்திற்கு முன் வரும் என கூறுகின்றனர்.
ஏற்கனவே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரியை டிரம்ப் நிர்வாகம் விதித்திருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த குடியரசு கட்சி எம்பிக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடிய நாடுகளின் பொருட்களுக்கு 500 சதவீத இறக்குமதி வரியை விதிக்கும் வகையிலான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்த மசோதாவிற்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க செனட் அவை உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம் அதிபர் டொனால்ட் ரஷ்யா பொருளாதார தடை மசோதாவுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால் இந்தியா, சீனா , பிரேசில் போன்ற ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடிய நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி 500 சதவீதமாக உயரும் என அவர் கூறுகிறார்.
அதாவது புதினின் போர் இயந்திரத்திற்கு இந்த நாடுகள் தான் நிதி கொடுத்து இயங்க வைக்கின்றன என கூறுகிறார். அதனை தடுக்க இந்த சட்டம் அவசியம் என்கிறார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டம் நடைமுறைக்கு வரும்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடிய நாடுகள் பெரிய அளவில் தண்டிக்கப்படும் என்கிறார்.
இந்த மசோதாவை முன்னெடுக்க டிரம்ப் பச்சை கொடி காட்டி இருப்பதால் அடுத்த வாரமே நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார் . ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரியை விதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டன. ஜவுளி, தோல் உற்பத்தி தொழில்கள் எல்லாம் சிக்கலில் இருக்கின்றன. அமெரிக்காவுக்கு மாற்றாக ஒரு சந்தையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் 500% இறக்குமதி வரி என்பது இவர்களுக்கு பேரிடியாக இருக்க போகிறது.
ஒரு புறம் அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. ஆனால் இதுவரை அந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் தான் கூடுதல் வரி விதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியா உடனான வர்த்தக விவகாரத்தில் அமெரிக்கா அச்சுறுத்தி காரியத்தை சாதிக்க பார்க்கிறதா என்ற விவாதமும் எழுகிறது.
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications