ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு தற்போது அமைதிப் பேச்சு வார்த்தைக்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு ராணுவ தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் நாட்டுத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட ஏராளமான தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் கடும் கோபமடைந்த ஈரான் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஈரானில் இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவித்தார். இந்த போர் நிறுத்த அறிவிப்பு கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. வரும் செவ்வாய்க்கிழமையுடன் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.

இந்த தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்குள் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போர் ஏற்பட்டு அதன் பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே பாகிஸ்தான், துருக்கி, சீனா , எகிப்து உள்ளிட்ட நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுத்த மிகத் தீவிரமாக கவனம் செலுத்துகின்றன.
அந்த வகையில் இஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முதல் கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இதில் அமெரிக்க துணை அதிக ஜே.டி.வான்ஸ் கலந்து கொண்டார். இதில் இருதரப்புமே தங்களுடைய நிபந்தனைகளை விட்டுக் கொடுக்க தயாராக இல்லாததால் முதல் கட்ட அமைதி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த சூழலில் விரைவில் இரண்டாம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது. இஸ்லாமாபாத்தில் இது நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். விரைவில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட போகிறது என உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டி இருக்கும் டிரம்ப், ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது தானே நேரடியாக இஸ்லாமாபாத் செல்வேன், அந்த சமயத்தில் நான் அங்கே இருப்பது அவசியம் என கூறியுள்ளார்.
ஈரான் வசம் அணு ஆயுதங்களே இல்லாத வகையில் ஒப்பந்தம் ஏற்படும் என உறுதியாக தெரிவித்துள்ள டிரம்ப், இது முடிந்த உடன் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலைகள் பழைய நிலைக்கு திரும்பும் என கூறியிருக்கிறார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? அமெரிக்க அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

பெட்ரோல் விலை ரூ.119, டீசல் விலை ரூ.127..!! இந்த மாத கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கு மக்களே!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications

