அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்தியப் பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய வரி விதிப்புக்கு முக்கியமான காரணம், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா இந்த வரியை விதித்துள்ளது. இதனால் இந்தியப் பொருட்களுக்கு இனி அமெரிக்க மண்ணில் மொத்தம் வரி 50% ஆக உயர உள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பதிலடி:
இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்ட வெளியுறவு அமைச்சகம் செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்கா கடந்த சில நாட்களில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறிவைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியை சந்தை சூழல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்வதாகவும், 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இதை செய்வதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனால், அமெரிக்கா இந்தியாவுக்கு மேலும் வரி விதிப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது, நியாயமற்றவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஏனெனில் பல நாடுகளும் தங்களின் தேசிய நலன்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செயல்படுகின்றன என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

எதிர் நடவடிக்கைகள்:
இந்தியா, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை எதிர்த்து, தனது தேசிய நலன்களை பாதுகாக்க அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அறிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சகம் செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.
இந்த கூடுதல் வரி விதிப்பு உத்தரவு, கையெழுத்திடப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா மற்றும் ரஷ்யா, அமெரிக்க நிர்வாகத்துடன் இறக்குமதி வரி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கால அவகாசம் கிடைக்கும்.
இந்த பேச்சுவார்த்தைகள், வரி விதிப்பின் தாக்கத்தை குறைப்பதற்கு அல்லது மாற்று தீர்வுகளை காண்பதற்கு வழிவகுக்கலாம். இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை, சரியானவை இல்லை மற்றும் காரணமற்றவை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய-அமெரிக்க வர்த்தக உறவு முக்கியமானதாக இருப்பதால், இந்த பதற்றத்தை தணிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications