அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரிக்கான இறுதி நாள் ஆகஸ்ட் 1, இன்னும் 2 நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இதுவரை வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத காரணத்தால், இந்திய பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துக்கொள்ளாத நாடுகள் மீது வரி விதிக்கும் படலம் தற்போது இந்தியா மீது திரும்பியுள்ளது. இந்த 25 சதவீத வரி ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

இந்த முடிவு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பிரச்சினைகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு படியாக பார்க்கப்பட்டாலும் இது அமெரிக்காவில் பணவீக்கத்தை அதிகரிக்கும், அதேபோல் இந்திய வர்த்தகர்களுக்கு இது பெரும் சுமையாக மாறும்.
டிரம்ப் தனது பதிவில், இந்தியாவின் நீண்டகால வர்த்தக நடைமுறைகள் மற்றும் ரஷ்யாவுடன் அதன் நெருக்கமான உறவுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிரம்ப்-ன் சமுக வலைத்தள பதிவில், "இந்தியா நம்முடைய நட்பு நாடு என்றாலும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன் அமெரிக்கா குறைவான வர்த்தகத்தையே மேற்கொண்டுள்ளோம், ஏனெனில் இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிக்கிறது. சொல்லப்போனால் உலகிலேயே அதிகமானவை வரியை இந்தியா விதிக்கிறது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுக்கும், பொருட்களுக்கும் விதிக்கும் தடைகள் மிகவும் கடுமையானவை. மேலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெரும்பாலான ராணுவ உபகரணங்களையும், சீனாவுடன் சேர்ந்து அதிகப்படியான எரிபொருளை வாங்கி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதற்காக, இந்தியா மீது தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் 25 சதவீத வரிக்கு கூடுதல் தண்டனை வரியும் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார், குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்காக இந்த கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் ரூ.45.7 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை உள்ளது.

இந்த வரி மூலம் பாதிக்கப்படும் பொருட்கள்:
ஆகஸ்ட் 1 முதல் அமலாக்கம் செய்யப்படும் இந்த 25% வரி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்கள், வைரம்/நகைகள், துணி/ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் இரும்பு/பித்தளை பொருட்கள் போன்றவை விலை அதிகரிக்கும்.
இதை தொடர்ந்து டிரம்ப் இந்தியா - ரஷ்ய உறவுகளை காரணம் காட்டி கூடுதல் வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் கூடுதல் பாதிப்பையும் இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர். இதனால், அமெரிக்க நுகர்வோருக்கு இந்த பொருட்களின் விலை அதிகரிப்பு பணவீக்கமாக மாறக்கூடும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்தியாவின் எதிர்வினை எப்படியிருக்கும்??
இந்தியா இதுவரை அமெரிக்காவின் 25 சதவீத ரெசிப்ரோக்கல் வரிக்கு எதிராக வரி அறிவிக்கவில்லை என்றாலும், அமெரிக்காவின் வரிகளுக்கும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் இந்தியா அரசு, அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டுவதற்காக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப்-ன் முதல் ஆட்சி காலத்தில் இந்திய பொருட்களுக்கு வரி விதித்த போதும், வர்த்தக தடைகளை விதித்த போதும், இந்திய அரசு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், தற்போது பேச்சுவார்த்தை தான் இந்திய அரசின் முக்கியமான நிலைப்பாடாக உள்ளது.
ஆகஸ்ட் மத்தியில் அமெரிக்க பிரதிநிதிகள் இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்திக்க உள்ளனர், இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

குஜராத்-க்கு அடித்தது யோகம்.. செமிகண்டக்டர் சிற் உற்பத்தியில் அடியெடுத்து வைக்கும் கேன்ஸ் டெக்னாலஜி..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications