அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வர்த்தகப் போரில் மற்றொரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை விதிக்க ஜூலை 9ஆம் தேதியை இறுதி நாளாக அறிவித்திருந்த நிலையில் இதை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்படும் என அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25% வரி விதிக்கப்படும் என்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை, தனது சொந்த சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் எழுதிய கடிதங்களை டிரம்ப் வெளியிட்டார்.

இந்தக் கடிதத்தில், அமெரிக்காவுடனான வர்த்தகம் இந்த இரு நாடுகள் உடன் சமமாக இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக டிரம்ப் அறிவித்தார். மேலும் இந்த நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை இக்கடிதத்தில் வலியுறுத்தினார்.
டிரம்ப் அரசு உலகின் அனைத்து நாடுகள் உடனும் சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கும் முக்கியமான இலக்கை கொண்டுள்ளது. அதாவது எந்தொரு நாட்டுடனும் அமெரிக்கா வர்த்தக சமநிலை (ஏற்றுமதி - இறக்குமதி சமநிலை) அடைய வேண்டும் அல்லது அமெரிக்கா ஏற்றுமதி உபரியை கொண்டு இருக்க வேண்டும் என்பது தான் டிரம்ப்-ன் டார்கெட். இந்த நிலையில் எந்தெந்த நாட்டுடன் இறக்குமதி உபரியாக உள்ளதோ அந்த நாட்டின் மீது வரி விதிக்க முடிவு செய்து விடுதலை நாள் என்ற பெயரில் ரெசிப்ரோக்கல் வரியை விதித்தார்.
இந்த நிலையில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான வர்த்தக உறவுகள், அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப இல்லை என்று டிரம்ப் கூறி ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படும் என்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு முன்பு, டிரம்ப் நிர்வாகம், ஜூலை 9, 2025க்குள் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்படாவிட்டால், வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று எச்சரித்திருந்தது.
ஆனால் ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு ஆகஸ்ட் 1 என்ற புதிய காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது, இது இரு நாடுகளுக்கும் மூன்று வாரங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பளிக்கிறது.
இந்த 25% வரி விதிப்பு, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை பாதிக்கலாம். மேலும் இந்த வரி விதிப்பு, இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பானின் ஆட்டோமொபைல் துறையும், தென் கொரியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தி துறைகளும், இந்த வரி உயர்வால் உற்பத்தி செலவுகள் அதிகரித்து அதன் தயாரிப்பின் விலையை உயர்த்தும். இவ்விரு துறையும் முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் இது அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஜப்பான் மற்றும் தென் கொரியா, இந்த வரி விதிப்புக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க பொருட்களுக்கு எதிர் வரிகளை விதிக்கலாம், இது ஒரு புதிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications