கனடா மீது 50% வரி.. டிரம்ப் அதிரடி அறிவிப்பால் ஷாக்!

அமெரிக்கா - கனடா மத்தியிலான வர்த்தக முரண்பாடு அதிகமாக இருந்த காரணத்தால் இரு நாட்டின் அரசும் வாஷிங்டனில் மூன்று நாட்கள் வர்த்தகப் பேச்சுத்தை நடத்தியது. இதில் இரு நாடுகளுக்கும் இடையே இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. மேலும் அமெரிக்க அரசு முன்வைத்த நிபந்தனைகள் கனடா நாட்டின் தொழில்துறையை கடுமையாக பாதிக்கும் வகையில் இருந்ததாக கனடா அரசு தரப்பில் தெரிவித்தது.

அமெரிக்க விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு கனடா அதிகப்படியான வரி விதிப்பதாகவும், இதனால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதை தொடர்ந்து, கனடாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% சுங்க வரியை விதித்துள்ளார்.

கனடா மீது 50% வரி.. டிரம்ப் அதிரடி அறிவிப்பால் ஷாக்!

திங்கட்கிழமை டிரம்ப் வெளியிட்ட உத்தரவில் இனி கனடாவில் இருந்து அமெரிக்க மண்ணில் இறக்குமதி செய்யப்படும் கார், லாரி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் ஸ்டீல் மீதான வரியை 2027 ஜனவரி 1 முதல் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கனடா உடனான வர்த்தக விவகாரம் தொடர்ந்து புகைந்து வந்த நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு தற்போது வரி விதிப்பது உறுதியாகியுள்ளது. இதேவேலையில் டிரம்ப் விதித்துள்ள புதிய வரி மூலம் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

கனடாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது எதிர் வரி விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு நாட்டுடனும் தனது வர்த்தக பற்றாக்குறையை சமன் செய்ய திட்டமிட்டு வருகிறது, சமன் செய்ய முடியாத நிலையில் வரியை விதிக்கும் நடைமுறையை டிரம்ப் 2வது முறை அதிபராக பதவியேற்றிய நாளில் இருந்து கடைப்பிடித்து வருகிறார்.

இந்த நிலையில் கனடாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு 60 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இதேவேளையில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார், லாரி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் ஸ்டீல் மீதான வரி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கனடாவின் மொத்த வர்த்தகத்தில் 95% அமெரிக்காவுடன் நடைபெறுவதாக டிரம்ப் கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+