அமெரிக்க நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் நியமிக்க அதிகளவில் பயன்படுத்துவது H-1B விசா தான். அதிலும் குறிப்பாக டெக் மற்றும் ஐடி சேவைத் துறையில் ஹெச்1பி விசா-வை நம்பி அதிகப்படியான நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசு இதில் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளார்.
இது அமெரிக்க டெக் நிறுவனங்கள் மத்தியிலும் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. H-1B திட்டத்தைச் சுற்றி நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் வேளையில் அமெரிக்க நிறுவனங்கள் மாற்று வழிகளை ஆராயவும், விசா வைத்திருப்பவர்கள் தொடர்ந்து தக்கவைத்து தங்களுடைய திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

ஒரு காலத்தில் ஹெச்1பி விசா வரப்பிரசாதமாக இருந்தது, ஆனால் இன்று H-1B விசா செயல்முறை மிகவும் சிக்கலாகவும் மற்றும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. இதனால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் தற்போது ஹெச்1பி விசா இல்லாமல் எப்படி வெளிநாட்டு ஊழியர்களைப் பயன்படுத்துவது என்பதில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்ப செயல்முறை உட்பட பலவற்றுக்கு நிறுவனங்கள் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது, இதேபோல் ஊழியர்களும் அதிகப்படியான செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிதி சுமை இரு தரப்புக்கும் பெரும் சுமையாக மாறி வரும் காரணத்தால் அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வெளியே அடிப்படையாகக் கொண்ட தொலைதூர ஊழியர்களை (Remote Employees) நியமிப்பது போன்ற மாற்றுத் தீர்வுகளைக் கையில் எடுத்துள்ளது.
என்வாய் குளோபல் என்ற நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பில், அமெரிக்காவில் பல நிறுவனங்கள் முதலில் அந்நாட்டில் பணியாளர்கள் நியமிக்கத் திட்டமிட்டு ஹெச்1பி விசாவில் செலவைத் தாண்டி விசா பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் காரணத்தைக் காட்டி அதிகப்படியான ரிமோட் ஊழியர்களை நியமிக்கும் பணியில் இயங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
பல இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் முதலாளிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களின் அறிவுரையைப் பின்பற்றி, அமெரிக்காவுக்கு மீண்டும் நுழைவதில் பெரும் சவால் இருக்கும் காரணத்தால் விசா காலம் முடியும் வரையில் அமெரிக்காவிலேயே வசிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications